செய்திகள்

ஈரோட்டில் இன்று வடமாநில இளம்பெண் துறவி ஆனார்

Published On 2018-09-23 17:36 IST   |   Update On 2018-09-23 17:36:00 IST
ஆன்மீகத்தில் ஈடுபாடு கொண்ட வடமாநில இளம்பெண் துறவியான நிகழ்ச்சி ஈரோட்டில் நடைபெற்றது. இதில் ஏராளமான வட மாநில மக்கள் கலந்து கொண்டனர்.

ஈரோடு:

ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்தவர் பிரகாஷ்ஜெயின். இவரது மகள் சுவேதா (வயது 24).

ஆன்மீகத்தில் ஈடுபாடு கொண்ட அவருக்கு துறவி ஆக ஆசை ஏற்பட்டது. இந்த முடிவை பெற்றோரிடம் தெரிவித்தார். அவர்களும் அதை ஏற்றுக்கொண்டனர்.

இதையொட்டி இன்று ஈரோடு இந்திரா நகரில் இருந்து ஊர்வலம் நடந்தது. இதில் சுவேதா குதிரையில் புதிய ஆடை நகைகள் அணிவித்தப்படி சென்றார்.

இந்த ஊர்வலத்தில் ஏராளமான வட மாநில மக்கள் கலந்து கொண்டனர்.

ஊர்வலம் ஈஸ்வரன் கோவில் வீதி, தெப்பக்குளம் வழியாக சென்று புதுஜெயின் கோவிலை அடைந்தது. வரும் ஜனவரி மாதம் முறைப்படி வடமாநிலம் சென்று சுவேதா துறவி கோலம் அடைகிறார். 

Tags:    

Similar News