செய்திகள்

திருவண்ணாமலையில் பிளஸ்-2 மாணவனை திருமணம் செய்த கல்லூரி மாணவி கைது

Published On 2018-09-19 05:23 GMT   |   Update On 2018-09-19 05:23 GMT
திருவண்ணாமலையில் பிளஸ்-2 மாணவனை திருமணம் செய்த வழக்கில் கல்லூரி மாணவியை போலீசார் கைது செய்தனர்.
திருவண்ணாமலை:

திருவண்ணாமலை மாவட்டம் கெங்கல மகாதேவி பகுதியை சேர்ந்த இளம்பெண் தனியார் கல்லூரியில் 2-ம் ஆண்டு படித்து வந்தார்.

இவரை அதே பகுதியை சேர்ந்த வாலிபர் ஒருவர் கடத்தி சென்று திருமணம் செய்து கொண்டதாகவும், தன்னுடைய மகளை மீட்டுத் தருமாறும் இளம்பெண்ணின் பெற்றோர் திருவண்ணாமலை மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவில் மனு அளித்தனர்.

இது தொடர்பாக சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் தலைவரும், முதன்மை மாவட்ட நீதிபதியுமான மகிழேந்தி விசாரணை நடத்தினார்.

கெங்கலமகாதேவி கிராமத்திற்கு நேரில் சென்று போலீசாரின் உதவியுடன் அந்த மாணவியிடம் வாலிபரிடமும் நீதிபதி விசாரணை நடத்தினார்.

விசாரணையில் கல்லூரி மாணவி மேஜர் என்பதும், அந்த வாலிபர் பிளஸ்-2 படிக்கும் மைனர் (17 வயது) என்பதும் தெரியவந்தது. மேலும் இருவரும் திருமணம் செய்து கொண்டதும் தெரிந்தது.

இதையடுத்து பிளஸ்-2 மாணவரான மைனரை சட்டத்திற்கு புறம்பாக திருமணம் என்ற பெயரில் குடும்பம் நடத்தியதால் கல்லூரி மாணவி மீதும், அந்த மாணவியை திருமணம் செய்து கொண்டு அவருடன் பாலியல் குற்றம் புரிந்ததாக மைனர் வாலிபர் மீதும் வழக்குப்பதிவு செய்ய கடலாடி போலீசாருக்கு நீதிபதி மகிழேந்தி உத்தரவிட்டார்.

இதையடுத்து கடலாடி போலீசார் வழக்குப்பதிவு செய்து கல்லூரி மாணவியை கைது செய்தனர். மாணவன் தலைமறைவாகி விட்டார். அவரை தேடி வருகின்றனர். #tamilnews
Tags:    

Similar News