செய்திகள்
கடலூர் துறைமுகத்தில் மீனவர்கள் படகுகளை நிறுத்தி வைத்துள்ளனர்.

கடலூர் மாவட்ட மீனவர்கள் இன்று 2-வது நாளாக வேலைநிறுத்தம்

Published On 2018-09-05 10:29 IST   |   Update On 2018-09-05 10:29:00 IST
பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து கடலூர் மாவட்ட மீனவர்கள் இன்று 2-வது நாளாக வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். #PetrolPriceHike
கடலூர்:

பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து கடலூர் மாவட்ட மீனவர்கள் நேற்று வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர்.

தங்களது பைபர் மற்றும் விசைப்படகுகளில் மீன் பிடிக்க செல்லவில்லை.

இதனால் 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட படகுகள் கடற்கரையில் வரிசையாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன.

மீனவர்கள் கூறும்போது, பெட்ரேல், டீசல் விலை உயர்வால் நாங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளோம். பைபர் படகில் டீசல் நிரப்புவதற்கே அதிக அளவில் பணம் செலவு ஆகிறது. எங்களுக்கு பெரிய அளவில் லாபம் இல்லை. உடனடியாக டீசல், பெட்ரோல் விலையை குறைக்கவில்லை என்றால் போராட்டத்தை தீவிரப்படுத்துவோம் என்றனர்.

அதன்படி இன்று 2-வது நாளாக கடலூர் மாவட்டத்தில் மீனவர்கள் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். மாவட்டத்தில் உள்ள தேவனாம்பட்டினம், சோனாங்குப்பம், ராசாப் பேட்டை உள்ளிட்ட 50 கிராமங்களில் உள்ள மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்க செல்லவில்லை. மீன்பிடி துறைமுகம் வெறிச்சோடி காணப்பட்டது.  #PetrolPriceHike
Tags:    

Similar News