செய்திகள்

துபாய் கடலில் மீன் பிடித்த தமிழக மீனவர்கள் 6 பேர் கைது

Published On 2018-09-03 09:54 GMT   |   Update On 2018-09-03 09:54 GMT
துபாய் கடலில் மீன் பிடித்த தமிழக மீனவர்கள் 6 பேரை ஈரான் கடற்படையினர் சிறைப் பிடித்துச் சென்றனர். #tamilnadufishermen

ராமநாதபுரம்:

ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை தாலுகா களிமண்குண்டு மங்களேசுவரி நகரைச் சேர்ந்த தங்கவேல் மகன் பூமி, ராமநாதபுரம் வைர வன்கோவில் கிராமத்தைச் சேர்ந்த முனியாண்டி மகன் பாலகுமார், திருவாடானை தாலுகா காரங்காடு கிராமத்தைச் சேர்ந்த பஞ்சவர்ணம் மகன் சதீஷ், தங்கராஜ் மகன் துரைமுருகன், செல்லையா மகன் அலெக்ஸ்பாண்டியன் மற்றும் தூத்துக்குடி மாவட்டம் குலசேகரப் பட்டணத்தைச் சேர்ந்த மில்டன் ஆகிய 6 பேரும் துபாய்க்கு மீன்பிடி ஒப்பந்த கூலித்தொழிலாளர்களாக பணி செய்ய கடந்த சில மாதங்களுக்கு முன்பு சென்றிருந்தனர்.

இவர்கள் துபாய் நாட்டு கடல் பகுதியில் படகில் சென்று மீன்பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த ஈரான் நாட்டுக் கடற் படையினர், தங்கள் நாட்டு கடல் பகுதிக்குள் ஊடுருவி வந்ததாக கூறி 6 மீனவர்களையும் சிறைப் பிடித்துச் சென்று விட்டனர்.

இது குறித்து தகவல் மீனவர்களின் குடும்பத்தினருக்கு தெரியவந்ததும் கவலையுடன் காணப்பட்டனர்.

ஈரான் கடற்படையினரால் சிறைப்பிடிக்கப்பட்ட தமிழக மீனவர்கள் 6 பேரையும் உடனடியாக மீட்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழ்நாடு மீன்பிடி தொழிற்சங்க கூட் டமைப்பின் மாவட்டச் செயலாளர் கருணாமூர்த்தி மற்றும் மீனவர்களின் குடும்பத்தினர் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். #tamilnadufishermen

Tags:    

Similar News