செய்திகள்

மின்சாரம் தாக்கி உயிரிழந்த 7 பேர் குடும்பத்துக்கு தலா ரூ.3 லட்சம் உதவி- எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு

Published On 2018-08-22 14:06 IST   |   Update On 2018-08-22 14:06:00 IST
பல்வேறு சம்பவங்களில் பலியான 7 பேர் குடும்பங்களுக்கு தலா ரூ.3 லட்சம் நிதி உதவி வழங்க முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். #TNCM #EdappadiPalanisamy
சென்னை:

தமிழக முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

விருத்தாசலம் வட்டம் மாத்தூர் கிராமத்தைச் சேர்ந்த பிச்சமுத்து அறுந்து கிடந்த மின் கம்பியை மிதித்ததில் மின்சாரம் தாக்கி உயிரிழந்தார்.

புதுக்கோட்டை மாவட்டம், நாவினிவயல் கிராமத்தைச் சேர்ந்த முத்துராமலிங்கம் மனைவி மாசிலாமணி மின் கம்பி அறுந்து விழுந்ததில், மின்சாரம் தாக்கி உயிரிழந்தார்.

மதுரை மாவட்டம், கல்கொண்டம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த மொக்குசு மின்சாரம் தாக்கி உயிரிழந்தார்.

கன்னியாகுமரி மாவட்டம், மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தில் பணியாளராகப் பணிபுரிந்து வந்த மைக்கேல்ராஜ் மின்சாரம் தாக்கி உயிரிழந்தார்.

கன்னியாகுமரி மாவட்டம், கொல்லங்கோடு ‘ஏ’ கிராமத்தைச் சேர்ந்த ஜெயகுமார் மின்சாரம் தாக்கி உயிரிழந்தார்.

திருவள்ளூர் மாவட்டம், கிருஷ்ணாபுரத்தைச் சேர்ந்த சந்திரசேகர் மின்சாரம் தாக்கி உயிரிழந்தார்.

திருநெல்வேலி மாவட்டம், கிருஷ்ணாபுரத்தைச் சேர்ந்த நாகராஜன் மனைவி பாப்பா, பாம்பு கடித்து உயிரிழந்தார்

இந்த துயரச் சம்பவங்களில் உயிரிழந்த 7 பேரின் குடும்பத்திற்கு எனது ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன். உயிரிழந்த 7 பேரின் குடும்பத்தினருக்கு தலா 3 லட்சம் ரூபாய் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்க உத்தரவிட்டுள்ளேன்.

இவ்வாறு அதில் கூறியுள்ளார். #TNCM #EdappadiPalanisamy
Tags:    

Similar News