செய்திகள்

மாணவிகளை பாலியலுக்கு அழைத்த விவகாரம்: நிர்மலாதேவிக்கு 14-ந்தேதி வரை காவல் நீடிப்பு

Published On 2018-08-02 13:02 IST   |   Update On 2018-08-02 13:02:00 IST
மாணவிகளை பாலியலுக்கு அழைத்த விவகாரத்தில் கைதான பேராசிரியை நிர்மலா தேவிக்கு வருகிற 14-ந்தேதி வரை காவல் நீட்டிக்கப்பட்டுள்ளது. #NirmalaDevi #NirmalaDeviCase
விருதுநகர்:

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில் உள்ள தேவாங்கர் கல்லூரி மாணவிகளை அதே கல்லூரியில் பணியாற்றும் பேராசிரியை நிர்மலா தேவி பாலியலுக்கு அழைத்த விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

இந்த விவகாரம் தொடர்பாக பேராசிரியை நிர்மலா தேவி மற்றும் பேராசிரியர் முருகன், ஆராய்ச்சி மாணவர் கருப்பசாமி ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.

இவர்களின் காவல் இன்றுடன் முடிவடைந்தது. இதைத்தொடர்ந்து அவர்கள் 3 பேரும் இன்று விருதுநகர் 2-வது மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டனர்.

அவர்கள் 3 பேருக்கும் வருகிற 14-ந்தேதி வரை காவலை நீடித்து மாஜிஸ்திரேட்டு திலகேஸ்வரி உத்தரவிட்டார்.

அதைத் தொடர்ந்து 3 பேரும் மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். #NirmalaDevi #NirmalaDeviCase
Tags:    

Similar News