செய்திகள்

மதுரை கூடல்நகர் வர்த்தக சங்க விழா - சிறந்த மாணவ, மாணவிகளுக்கு அப்துல் கலாம் நினைவுப்பரிசு

Published On 2018-07-30 15:30 IST   |   Update On 2018-07-30 15:30:00 IST
மதுரை கூடல்நகர் வர்த்தக சங்க குடும்ப விழாவில், பொதுத்தேர்வுகளில் சிறந்த மதிப்பெண்கள் பெற்ற மாணவ-மாணவிகளுக்கு டாக்டர் அப்துல் கலாம் பெயரில் நினைவுப்பரிசு வழங்கப்பட்டது. #MaduraiTradeAssociation
மதுரை:

மதுரை கூடல் நகர் வர்த்தக சங்கத்தின் ஐந்தாம் ஆண்டு குடும்ப விழா, அஞ்சல் நகர் புஷ்பம் அரங்கத்தில் நடைபெற்றது. விழாவிற்கு சங்கத் தலைவர் இரா.கண்ணன் தலைமை தாங்கினார். விழாவின் துவக்கமாக டாக்டர் அப்துல் கலாம் புகைப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. சங்கத்தின் நிதிநிலை அறிக்கை வாசிக்கப்பட்டு, சங்கத்தின் செயல்பாடுகள் குறித்து நிர்வாகிகள் உரையாற்றினர்.



விழாவில் கூடல்புதூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சந்திர சேகரன், விக்னேஸ்வர் எண்டர்பிரைசஸ் பழனிராஜன் ஆகியோர் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு, அரசு பொதுத் தேர்வுகளில் சிறந்த மதிப்பெண்கள் பெற்ற முதல் மூன்று மாணவ-மாணவிகளுக்கு டாக்டர் அப்துல் கலாம் பெயரில் நினைவுப் பரிசுகளை வழங்கினார்கள்.

விழாவில் சங்க துணைத் தலைவர்கள் தங்கம் என்ற தங்கராஜ், முருகன், சோமசுந்தரம், பொருளாளர் பாலமுருகன், சட்ட ஆலோசகர் சந்திரசேகர், இணை செயலாளர் லெட்சுமணன், துணை செயலாளர் முத்துகலா, செயற்குழு உறுப்பினர்கள் ஜெகதீசன், சொக்கலிங்கம், ரமேஷ், அப்துல் சம்மது, மிராண்டா, சுரேஷ் குமார், செல்வகுமார், முத்துப்பாண்டி, கெமிலஸ், சீதாராமன், சங்க கணக்கர் வெங்கடேஷ் மற்றும் உறுப்பினர்கள் குடும்பத்துடன் கலந்துகொண்டனர். #MaduraiTradeAssociation
Tags:    

Similar News