செய்திகள்

செங்கல்பட்டில் அவசரகால சிகிச்சை பிரிவு- அமைச்சர் விஜயபாஸ்கர் தொடங்கி வைத்தார்

Published On 2018-07-24 15:14 IST   |   Update On 2018-07-24 15:14:00 IST
செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அமைச்சர் விஜய பாஸ்கர் விபத்து மற்றும் அவசர கால சிகிச்சைப் பிரிவை தொடங்கி வைத்தார்.
சென்னை:

செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அமைச்சர் டாக்டர் சி.விஜய பாஸ்கர் விபத்து மற்றும் அவசர கால சிகிச்சைப் பிரிவு, மாவட்ட இடைநிலை இடையீட்டு சேவைகள் மையம், முதியோர் பராமரிப்பு பிரிவு, மத்திய நவீன விரிவுரைக்கூடம் மற்றும் புலன் உணர்வு தூண்டும் பூங்கா ஆகியவற்றை திறந்து வைத்து மருத்துவமனை வளாகத்தில் மரக்கன்றினை நட்டார். பின்னர் மருத்துவமனையின் குழந்தைகள் நலப்பிரிவில் சுகாதார விழிப்புணர்வு வண்ண ஓவியங்களை வரைந்தமைக்காக கல்லூரி மாணவ மாணவிகளுக்கு பாராட்டுச் சான்றிதழ் வழங்கி அவர் பேசுகையில்,

“செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ரூ.60 கோடி மதிப்பில் 50 ஏக்கர் நிலப்பரப்பில் சர்வதேச யோகா மற்றும் இயற்கை மருத்துவ அறிவியம் மையம், ரூ.4 கோடி மதிப்பில் புதிய டருமா கேர் சென்டர், ரூ.3.41 கோடி மதிப்பில் முடநீக்கியல் மையம், ரூ.8.8 கோடி மதிப்பில் அதி நவீன உபகரணங்கள், ரூ.1.55 கோடி செலவில் மருத்துவ திறன் மேம்பாட்டுக் கூடங்கள், ரூ.1 கோடி செலவில் செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையை மையமாகக் கொண்டு (எச்.யு.பி.) அவற்றை சார்ந்து மருத்துவமனைகளிலும் மாரடைப்பு சிகிச்சை பிரிவுகள், ரூ.73.00 லட்சம் செலவில் காது வால் நரம்பு உள்வைப்பு கருவி பொருத்தும் மையம் தொடங்கப்படும்.

ரூ.42.5 லட்சம் மதிப்பில் குருதி பகுப்பாய் கருவிகள், ரூ.9.54 லட்சம் செலவில் முதியோர் நலப் பிரிவுகளை தொடங்கத் தேவையான மருத்துவர்கள் மற்றும் பிற பணியாளர்கள் நியமனம் செய்யப்படுவார்கள். இதன் மூலம் காஞ்சிபுரம் மாவட்ட மக்கள் உயர்தர மருத்துவ சேவைகளை பெறுவார்கள் என்றார். #TNMinister #Vijayabaskar
Tags:    

Similar News