செய்திகள்
ஒகேனக்கல் காவிரி ஆற்றில் பெருக்கெடுத்து ஓடும் வெள்ளநீர்.

ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து 75 ஆயிரம் கன அடியாக அதிகரிப்பு

Published On 2018-07-23 10:45 IST   |   Update On 2018-07-23 10:45:00 IST
ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து நேற்று 70 ஆயிரம் கனஅடியாக அதிகரித்தது. இன்று நீர்வரத்து 75 ஆயிரம் கனஅடியாக அதிகரித்தது. #Hogenakkalfalls
ஒகேனக்கல்:

கர்நாடக மாநில காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் கனமழை பெய்து வருவதால் கபினி, கிருஷ்ணராஜசாகர் அணைகளில் இருந்து காவிரி ஆற்றில் அதிக அளவில் தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளதால் கர்நாடக-தமிழக எல்லை பகுதியான பிலிக்குண்டுலு வழியாக ஒகேனக்கல்லுக்கு நேற்று முன்தினம் 66 ஆயிரம் கனஅடியாக வந்த நீர்வரத்து நேற்று 70 ஆயிரம் கனஅடியாக அதிகரித்தது. இன்று நீர்வரத்து 75 ஆயிரம் கனஅடியாக அதிகரித்தது.

இன்று 15-வது நாளாக ஒகேனக்கல்லில் குளிக்கவும், பரிசல் இயக்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

ஒகேனக்கல்லுக்கு சுற்றுலா வரும் பயணிகள் காவிரி ஆற்றில் ஓடும் வெள்ளப்பெருக்கை பார்த்து விட்டு செல்கிறார்கள்.

தொடர்ந்து காவிரி ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுவதால் பொதுமக்கள் குளிக்கவோ, துணி துவைக்கவோ, ஆற்றை கடக்கவோ கூடாது என்று மாவட்ட நிர்வாகம் எச்சரித்து உள்ளது.

சுற்றுலா பயணிகள் காவிரி கரையோரம் நின்று செல்பி எடுக்க கூடாது என்றும் எச்சரித்து உள்ளனர்.  #Hogenakkalfalls



Tags:    

Similar News