செய்திகள்
தலைமை ஆசிரியர் முருகேசன்

ராஜபாளையத்தில் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை- தலைமை ஆசிரியர் கைது

Published On 2018-07-21 05:15 GMT   |   Update On 2018-07-21 05:15 GMT
ராஜபாளையத்தில் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக பள்ளி தலைமை ஆசிரியர் கைது செய்யப்பட்டார்.
ராஜபாளையம்:

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் திருவள்ளுவர் நகரில் செயல்படும் அரசு உயர்நிலைப்பள்ளியில் தலைமை ஆசிரியராக பணியாற்றுபவர் முருகேசன் (வயது45).

இவர் அங்கு படிக்கும் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுப்பதாக புகார் கூறப்பட்டது. கடந்த 19-ந்தேதி பள்ளி வகுப்பறையில் இருந்த 2 மாணவிகளிடம் தலைமை ஆசிரியர் முருகேசன் தவறாக நடக்க முயன்றுள்ளார். இதுகுறித்து மாணவிகள் தங்கள் வீட்டில் தெரிவித்தனர். அதைத் தொடர்ந்து ராஜபாளையம் அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்யப்பட்டது.

இன்ஸ்பெக்டர் மீனா விசாரணை நடத்தினார். இந்த நிலையில் தலைமை ஆசிரியரை கைது செய்யக்கோரி மாணவிகளின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் ராஜபாளையத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

பாலியல் தொல்லை கொடுத்த தலைமை ஆசிரியர் முருகேசன் ஏற்கனவே இதுபோல நடந்துள்ளதால் அவருக்கு கடுமையான தண்டனை வழங்க வேண்டும் என மறியலில் ஈடுபட்டவர்கள் கூறினர்.

இந்த போராட்டத்தை தொடர்ந்து தலைமை ஆசிரியர் முருகேசனை போலீசார் கைது செய்தனர். #Tamilnews
Tags:    

Similar News