செய்திகள்
போலி பயிற்சியாளர் ஆறுமுகத்தை கோர்ட்டில் ஆஜர்படுத்த போலீசார் அழைத்து வந்த காட்சி.

போலி பயிற்சியாளர் ஆறுமுகம் கோவை கோர்ட்டில் இன்று ஆஜர்

Published On 2018-07-14 09:46 GMT   |   Update On 2018-07-14 09:46 GMT
மாணவியை 2-வது மாடியில் இருந்து தள்ளி விட்டதாக கைது செய்யப்பட்ட பேரிடர் மேலாண்மை பயிற்சியாளர் ஆறுமுகத்தை போலீசார் இன்று கோவை கோர்ட்டில் ஆஜர்படுத்தினர்.
கோவை:

கோவை தொண்டாமுத்தூர் அருகே உள்ள நாதே கவுண்டன் புதூரை சேர்ந்தவர் நல்லாகவுண்டர். இவரது மகள் லோகேஸ்வரி (19).

இவர் நரசீபுரத்தில் உள்ள கலைமகள் கலை அறிவியல் கல்லூரியில் பி.பி.ஏ. 2-ம் ஆண்டு படித்து வந்தார். நேற்று முன்தினம் கல்லூரியில் பேரிடர் மேலாண்மை பயிற்சி அளிக்கப்பட்டது.

அப்போது மாணவியை 2-வது மாடியில் இருந்து தள்ளி விட்டதாக பேரிடர் மேலாண்மை பயிற்சியாளர் ஆறுமுகம் கைது செய்யப்பட்டார். அவரிடம் கடந்த 2 நாட்களாக ஆலாந்துறை போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.

இன்று மதியம் விசாரணை முடிந்து அவரை கோவை ஜே.எம். எண்-5 கோர்ட்டில் மாஜிஸ்திரேட்டு இனியா கருணாகரன் முன்னிலையில் ஆஜர்படுத்தினர். இதனை தொடர்ந்து ஆறுமுகம் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். அவரை காவலில் எடுத்து விசாரணை நடத்த போலீசார் திட்டமிட்டு உள்ளனர்.

இதற்காக கோர்ட்டில் போலீசார் மனு தாக்கல் செய்ய உள்ளனர். இந்த விசாரணையின் போது மேலும் பல தகவல்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.



Tags:    

Similar News