செய்திகள்

அண்ணாசாலை பகுதியில் வீட்டில் பதுக்கிய ரூ.1 லட்சம் குட்கா போதைப்பொருள் பறிமுதல் - 3 பேர் கைது

Published On 2018-07-11 10:54 IST   |   Update On 2018-07-11 10:54:00 IST
அண்ணாசாலை பகுதியில் வீட்டில் பதுக்கிய ரூ.1 லட்சம் மதிப்புளள குட்கா போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டது.#Gutka

சென்னை:

சென்னை அண்ணாசாலையில் உள்ள ஒரு வீட்டில் தடை செய்யப்பட்ட குட்கா உள்ளிட்ட போதை பொருட்கள் பதுக்கி வைக்கப்பட்டு இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

இதையடுத்து போலீசார் அண்ணாசாலை குருசாமி தெருவில் உள்ள ஒரு வீட்டில் சோதனை செய்தனர். அப்போது அங்கு போதை பொருட்கள் பதுக்கி வைக்கப்பட்டு இருந்தது தெரிந்தது.

போதை பொருட்களான ஹான்ஸ், ரெமோ, கூல்லிட், சைனி, பான் பராக் உள்ளிட்டவை பாக்கெட்டுகளாக இருந்தன. இதன் மதிப்பு ரூ.1 லட்சம் ஆகும். அவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.

இது தொடர்பாக அப்துல் மாலிக், முகமது அன்வர், குமரேசன் ஆகிய 3 பேரை கைது செய்தனர்.

குட்கா போதை பொருட்களை எங்கிருந்து வாங்கி வந்தார்கள், எந்த பகுதிகளில் விற்பனை செய்தனர் என்பது குறித்து தீவிரமாக விசாரணை நடந்து வருகிறது. #Gutka

Tags:    

Similar News