செய்திகள்

கனமழை காரணமாக கோவை மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை: மாவட்ட ஆட்சியர் ஹரிஹரன்

Published On 2018-06-12 08:43 IST   |   Update On 2018-06-12 08:43:00 IST
கோவை மாவட்டத்தில் பெய்து வரும் கன மழை காரணமாக இன்று பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவித்து மாவட்ட கலெக்டர் டி.என். ஹரிஹரன் உத்தரவிட்டார்.#RainInKovai #HolidayForSchools
கோயம்புத்தூர் :

தென்மேற்கு பருவமழை காரணமாக நீலகிரி மற்றும் கோயம்புத்தூர் மாவட்டங்களில் கடந்த இரண்டு நாட்களாக கனமழை பெய்து வருகிறது.  

கனமழையினால் கோவை மாவட்டம், பில்லூர் அணைக்கு வரும் நீர்வரத்து அதிகரித்துள்ளது. அதனை தொடர்ந்து பவானி ஆற்றின் கரையோரம் மற்றும் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு கோவை மாவட்ட ஆட்சியர் டி.என். ஹரிஹரன் வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்தார்.

கனமழை பெய்து வருவதால் இன்று பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவித்து மாவட்ட கலெக்டர் டி.என். ஹரிஹரன் உத்தரவிட்டார்.

பலத்த காற்றுடன் மழை பெய்ததன் காரணமாக மரங்கள் விழுந்துள்ளதால் கோவை குற்றாலத்திற்கு சுற்றுலா பயணிகள் செல்ல வனத்துறை தற்காலிக தடை விதித்துள்ளது.

இதேபோல் நீலகிரி மாவட்டத்தில் பெய்து வரும் தொடர் மழையால் உதகை, கூடலூர், பந்தலூர், குந்தா தாலுகாவில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. #RainInKovai #HolidayForSchools
Tags:    

Similar News