செய்திகள்

சங்கரன்கோவில் அருகே 5 வயது சிறுமியிடம் சில்மி‌ஷம்: 11-ம் வகுப்பு மாணவன் கைது

Published On 2018-06-10 17:48 IST   |   Update On 2018-06-10 17:48:00 IST
சங்கரன்கோவில் அருகே 11-ம் வகுப்பு மாணவன், 5 வயது சிறுமியிடம் சில்மி‌ஷத்தில் ஈடுபட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

சங்கரன்கோவில்:

சங்கரன்கோவில் அருகே உள்ள பெரும்பத்தூரை சேர்ந்த 16 வயது சிறுவன் அங்குள்ள அரசு பள்ளியில் 11-ம் வகுப்பு படித்து வருகிறான். இவனது பக்கத்து வீட்டில் 5 வயது சிறுமி ஒன்று உள்ளது. அந்த சிறுமியிடம் மாணவன் அடிக்கடி பேசி விளையாடி கொண்டிருப்பான்.

இந்நிலையில் நேற்று மாலை வீட்டின் முன்பு அந்த சிறுமி விளையாடி கொண்டிருந்தது. இதை பார்த்த அந்த மாணவன் சிறுமிக்கு சாக்லெட் கொடுத்து தூக்கி சென்றான். பின்னர் வீட்டின் பின்புறம் அந்த சிறுமியிடம் சில்மி‌ஷத்தில் ஈடுபட்டான். சிறிது நேரத்திற்கு பின்னர் அந்த சிறுமி அழுது கொண்டே வீட்டிற்கு வந்தது.

பின்னர் சிறுமியின் பெற்றோர் விபரம் கேட்டனர். இதற்கு அவள் நடந்த விபரத்தை கூறினாள். இதை கேட்டு அதிர்ச்சியடைந்த சிறுமியின் பெற்றோர் சங்கரன்கோவில் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் செய்தனர். புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் மாணவனை கைது செய்து கோர்ட்டில் ஆஜர் படுத்தினர்.

பின்னர் நீதிபதி உத்தரவின் பேரில் நெல்லை சிறுவர் சீர்திருத்த பள்ளியில் மாணவன் அடைக்கப்பட்டான். 11-ம் வகுப்பு மாணவன், 5 வயது சிறுமியிடம் சில்மி‌ஷத்தில் ஈடுபட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

Similar News