செய்திகள்

தூத்துக்குடி துப்பாக்கி சூடு - தேசிய மனித உரிமை ஆணைய‌ விசாரணை நாளை தொடக்கம்

Published On 2018-06-01 07:28 GMT   |   Update On 2018-06-01 07:28 GMT
தூத்துக்குடி துப்பாக்கி சூடு குறித்து‌ தேசிய மனித உரிமை ஆணைய‌ம் நாளை காலை தூத்துக்குடி வருகிறார்கள். தொடர்ந்து 5 நாட்கள் தங்கியிருந்து விசாரணை நடத்தலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
தூத்துக்குடி:

தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் குறித்து விசாரணை நடத்த மனித உரிமை ஆணையம் சார்பாக சிறப்பு குழு அமைக்கப்பட்டு உள்ளது. இந்த குழுவில் மூத்த போலீஸ் துணை சூப்பிரண்டு தலைமையில் 4 பேர் இடம்பெற்று உள்ளனர்.

அவர்கள் நாளை காலை தூத்துக்குடி வருகிறார்கள். தொடர்ந்து 5 நாட்கள் தங்கியிருந்து விசாரணை நடத்தலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. அந்த குழுவினர் தூத்துக்குடியில் துப்பாக்கி சூடு, கலவரம் நடந்த பகுதிகளை பார்வையிடுகின்றனர். தொடர்ந்து துப்பாக்கி சூட்டில் பலியானவர்களின் குடும்பத்தினரையும், காயமடைந்தவர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினரையும் நேரில் சந்தித்து விசாரணை மேற்கொள்கிறார்கள்.

துப்பாக்கி சூடு சம்பவத்தில் மனித உரிமை மீறல் எந்த அளவுக்கு நடந்துள்ளது? துப்பாக்கி சூட்டின் பின்னணி என்ன? என்றும் கள ஆய்வில் ஈடுபடுகிறார்கள். இந்த சிறப்பு குழுவின் முழுமையான விசாரணை, ஆய்வு முடிந்ததும் அறிக்கை தயார் செய்யப்படுகிறது. அதனை தேசிய மனித உரிமை ஆணையத்தில் சிறப்பு குழு 2 வாரங்களுக்குள் சமர்ப்பிக்கிறது.
Tags:    

Similar News