செய்திகள்
நீட் தேர்வுக்கு தி.மு.க, காங்கிரஸ் கட்சிகள்தான் காரணம் - தம்பிதுரை
நீட் தேர்வுக்கு தி.மு.க, காங்கிரஸ் கட்சிகள்தான் காரணம் பாராளுமன்ற துணை சபாநாயகரும், அ.தி.மு.க.வின் மூத்த தலைவருமான தம்பிதுரை கூறினார்.
ஆலந்தூர்:
பாராளுமன்ற துணை சபாநாயகரும், அ.தி.மு.க.வின் மூத்த தலைவருமான தம்பிதுரை, சென்னை விமான நிலையத்தில் நிருபர்களிடம் கூறியதாவது:-
நீட் தேர்வுக்கு தி.மு.க-காங்கிரஸ் கட்சிகள்தான் காரணம். 2012-ம் ஆண்டு மத்திய அரசில் நீட் தேர்வு கொண்டுவர முடிவு செய்யப்பட்டது. நீட் தேர்வு வேண்டாம் என்பதுதான் அ.தி.மு.க.வின் கொள்கையாகும். நீட் தேர்வுக்காக நடக்கும் பலிகள் தி.மு.க.வினால்தான் ஏற்பட்டு உள்ளது.
தான் செய்த தவறுகளை மறைக்க தி.மு.க. நாடகம் ஆடிக்கொண்டு இருக்கிறது. தமிழக உரிமைகள் பறிபோவதற்கும் அவர்கள்தான் காரணம். தி.மு.க. ஆட்சியில்தான் கல்வி பொதுபட்டியலில் சேர்க்கப்பட்டது. அவர்கள் நினைத்து இருந்தால் கல்வியை மாநில பட்டியலில் சேர்த்து இருக்க முடியும்.
மத்தியில் ஆட்சியில் இருந்தபோது நீட் தேர்வுக்கு காரணமான தி.மு.க., தற்போது அ.தி.மு.க. மீது குறை சொல்லி திசை திருப்புவதை மக்கள் நம்பமாட்டார்கள். நீட் தேர்வுக்காகத்தான் தமிழக கல்வியில் பல்வேறு மாற்றங்களை கொண்டு வர முதல்-அமைச்சர் மற்றும் கல்வி அமைச்சர் நடவடிக்கை எடுத்து புதிய பாடத்திட்டங்களை அறிமுகப்படுத்தி உள்ளனர்.
மாணவர்களுக்கு எந்த மன உளைச்சலும் ஏற்படாத வகையில் தமிழக அரசு நடவடிக்கை எடுக்கும். மத்திய பாடத்தைவிட தரமான கல்வியை தர தமிழக அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.