செய்திகள்
ஸ்ரீபெரும்புதூர் அருகே மோட்டார் சைக்கிள் விபத்தில் 2 பேர் பலி
ஸ்ரீபெரும்புத்தூர் அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோட்டார் சைக்கிள் மீது மோதிய விபத்தில் 2 பேர் சம்பவ இடத்திலேயே பலியானார்கள்.
ஸ்ரீபெரும்புதூர்:
திருவள்ளூரை அடுத்த வயலூரை சேர்ந்தவர்கள் கிருஷ்ணன் (வயது 60), வெங்கடேசன் (48). பஜனை பாடும் குழுவை சேர்ந்தவர்கள்.
இவர்கள் 2 பேரும் ஸ்ரீபெரும்புதூரில் உள்ள ராமானுஜர் கோவிலில் நடக்கும் பிரம்மோற்சவ விழாவில் பஜனை பாட வந்து இருந்தனர்.
இன்று அதிகாலை அவர்கள் அங்கிருந்து ஒரே மோட்டார் சைக்கிளில் வயலூர் நோக்கி சென்றனர். ஸ்ரீபெரும்புதூரை அடுத்த செட்டிபுன்னியம் அருகே சென்னை- பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் வந்து கொண்டிருந்த போது அடையாளம் தெரியாத வாகனம் மோட்டார் சைக்கிள் மீது மோதி நிற்காமல் சென்றுவிட்டது.
இதில் பலத்த காயம் அடைந்த கிருஷ்ணனும், வெங்கடேசனும் சம்பவ இடத்திலேயே பலியானார்கள். இது குறித்து ஸ்ரீபெரும்புதூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விபத்து ஏற்படுத்திய வாகனம் குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.