செய்திகள்

மதுராந்தகம் போலீஸ் நிலையத்தில் பெண் போலீஸ் தற்கொலை முயற்சி

Published On 2018-03-22 12:32 IST   |   Update On 2018-03-22 12:32:00 IST
மதுராந்தகம் போலீஸ் நிலையத்தில் பெண் போலீஸ் கொசு மருந்து குடித்து தற்கொலைக்கு முயற்சி செய்துள்ளார். அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
மதுராந்தகம்:

மதுராந்தகம் மது விலக்கு அமலாக்கப் பிரிவின் தலைமை காவலராக பணியாற்றுபவர் சபீராபானு. 2 நாட்கள் விடுமுறை எடுத்து இருந்த சபீராபானு இன்று காலை பணிக்கு வந்தார். அப்போது அவர் மிகவும் சோர்வாக காணப்பட்டார்.

திடீரென்று, போலீஸ் நிலையத்தில் இருந்த கொசு மருந்தை சபீராபானு குடித்தார். இதில் அவர் சிறிது நேரத்தில் மயங்கி கீழே விழுந்தார்.

இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த மற்ற காவலர்கள் சபீராபானுவை மேல் மருவத்தூர் தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

குடும்ப பிரச்சினை காரணமாக தற்கொலைக்கு முயன்றாரா? அல்லது பணிச்சுமை காரணமா? என்று அச்சரப்பாக்கம் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

சபீரா பானுவின் கணவர் ரவி, மேல்மருவத்தூர் காவல் நிலையத்தில் தலைமை எழுத்தராக பணியாற்றி வருகிறார் என்பது குறிப்பிடதக்கது. #tamilnews

Similar News