செய்திகள்
பறிமுதல் செய்யப்பட்ட மணல் மூட்டைகளை படத்தில் காணலாம்.

நம்பியூர் அருகே கடத்தல் கும்பலிடமிருந்து 100 மணல் மூட்டைகள் பறிமுதல்

Published On 2018-02-26 15:52 IST   |   Update On 2018-02-26 15:52:00 IST
நம்பியூர் அருகே கடத்தலுக்கு தயாராக வைத்திருந்த 100-க்கும் மேற்பட்ட மணல் மூட்டைகளை கடத்தல் கும்பலிடமிருந்து வருவாய்த் துறையினர் பறிமுதல் செய்தனர்.
நம்பியூர்:

ஈரோடு மாவட்டம் நம்பியூர் அருகே உள்ள குருமந்தூர் கீழ்பவானி வாய்க்காலிலும் மற்றும் கருங்காடு என்ற இடத்திலும் ஒரு கும்பல் மணலை அள்ளி கடத்தி கொண்டு வந்தது.

மணல் கடத்தல் கும்பல் மணலை திருட்டுத்தனமாக அள்ளி மூட்டைகளில் கட்டி பிறகு அதனை வாகனங்களில் கடத்தி சென்றனர்.

இதுபற்றி பல புகார்கள் வருவாய்துறையினருக்கு சென்றது. இந்த நிலையில் வருவாய் அதிகாரிகள் திடீரென அப்பகுதியில் ரோந்து சென்றனர். அதிகாரிகளை கண்டதும் அங்கு மணல் கடத்த மூட்டைகளில் மர்ம கும்பல் மணலை அள்ளி கட்டிக் கொண்டிருந்தனர்.

அதிகாரிகளை கண்டதும் அந்த கும்பல் மணல் மூட்டைகளை அங்கேயே போட்டுவிட்டு தப்பி ஓடிவிட்டது.

கடத்தலுக்கு தயாராக வைத்திருந்த 100-க்கும் மேற்பட்ட மணல் மூட்டைகளை வருவாய்த் துறையினர் பறிமுதல் செய்தனர்.

இது பற்றி தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது. இந்த அளவுக்கு மணல் மூட்டைகளை கடத்தும் முக்கிய புள்ளி யார்? என்று விசாரணை நடந்து வருகிறது.  #tamilnews



Similar News