செய்திகள்

தஷ்வந்துக்கு விதிக்கப்பட்ட தூக்குத்தண்டனை உறுதி செய்ய கோரும் வழக்கு: ஐகோர்ட்டு நோட்டீசு

Published On 2018-02-26 09:32 GMT   |   Update On 2018-02-26 09:32 GMT
சிறுமி ஹாசினி கொலை வழக்கில் தஷ்வந்துக்கு விதிக்கப்பட்ட தூக்குத்தண்டனை உறுதி செய்ய கோரும் வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டுள்ளது.
சென்னை:

சென்னை குன்றத்தூரை சேர்ந்த சிறுமி ஹாசினி கடந்த ஆண்டு பாலியல் கொடுமை செய்யப்பட்டு, கொடூரமாக கொலை செய்யப்பட்டார். இந்த சிறுமியை தஷ்வந்த் என்ற என்ஜினீயரிங் பட்டதாரி கொடூரமாக கொலை செய்தது தெரியவந்தது.

இந்த கொலை வழக்கை விசாரித்த செங்கல்பட்டு மகளிர் கோர்ட்டு நீதிபதி வேல்முருகன், தஷ்வந்த் மீதான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டுள்ளது. அதனால், அவருக்கு தூக்கு தண்டனை விதிப்பதாக கடந்த வாரம் தீர்ப்பு வழங்கினார். இதுபோல குற்றவாளிகளுக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டால், அந்த தண்டனையை உறுதி செய்ய மாவட்ட கோர்ட்டு, ஐகோர்ட்டுக்கு அனுப்பி வைக்கும்.

அதன்படி, இந்த வழக்கு ஐகோர்ட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இந்த வழக்கை நீதிபதிகள் சி.டி.செல்வம், சதீஷ்குமார் ஆகியோர் விசாரித்து, வழக்கிற்கு பதில் அளிக்கும்படி தஷ்வந்துக்கு நோட்டீசு அனுப்ப உத்தரவிட்டனர்.

அதேபோல, உடுமலைப் பேட்டை சங்கர் கொலை வழக்கில், பலருக்கு கீழ் கோர்ட்டு தூக்குத்தண்டனை விதித்தது. இந்த தண்டனையை உறுதி செய்யவேண்டும் என்று ஐகோர்ட்டுக்கு கீழ் கோர்ட்டு அனுப்பி வைத்தது. இந்த வழக்கை விசாரணைக்கு எடுத்துக் கொண்ட ஐகோர்ட்டு நீதிபதி சி.டி.செல்வம், சதீஷ்குமார் ஆகியோர், வழக்கிற்கு பதில் அளிக்கும்படி தண்டனை பெற்றவர்களுக்கு நோட்டீசு அனுப்ப உத்தரவிட்டனர். #Tamilnews
Tags:    

Similar News