செய்திகள்

ரவுடிகள் மீதான நடவடிக்கை தொடரும் - துணை கமி‌ஷனர் பேட்டி

Published On 2018-02-24 08:34 GMT   |   Update On 2018-02-24 08:34 GMT
சேலத்தில் ஒரே நாளில் 24 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். ரவுடிகள் மீதான நடவடிக்கை தொடரும் என்று துணை கமி‌ஷனர் சுப்புலெட்சுமி கூறினார்.
சேலம்:

சேலம் மாநகரில் ரவுடிகள் மற்றும் குற்றச் செயல்களில் ஈடுபடுவோர் மீது கடுமையான நடவடிக்கைகள் தொடங்கி உள்ளது

குற்றப்பதிவேடு மூலம் ரவுடிகள் கண்காணிக்கப்பட்டு பொதுமக்கள் பாதுகாப்பிற்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் செயல்பட்டு வந்த 72 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இதில் 26 ரவுடிகள் நேற்று ஒரே நாளில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

அன்ன தானப்பட்டியை சேர்ந்த குமார் என்ற வளத்திகுமார், கோழி பாஸ்கர், கார்த்தி, தங்கராஜ், தன்ராஜ், மோகன் என்ற கருவா மோகன், சுரேஷ் என்ற கெத்து சுரேஷ் உள்பட பலர் அடங்குவர்.

ரவுடிகளை கைது செய்வதை அறிந்ததும் மற்ற ரவுடிகள் நேற்று மாலை முதலே தலைமறைவாகி விட்டனர். தலைமறைவான ரவுடிகளை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. அந்த தனிப்படையினர் ரவுடிகளை பிடிக்க தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.

இது குறித்து மாநகர சட்டம்-ஒழுங்கு துணை கமி‌ஷனர் சுப்புலெட்சுமி கூறியதாவது:-

பொது மக்களின் உடமைக்கும், உயிருக்கும் அச்சுறுத்தலை ஏற்படுத்தும் விதமாக யரேனும் செயல்படுவதாக தெரிந்தால் அவர்கள் மீது கடுமையான சட்டப்பிரிவுகளின் கீழ் நடவடிக்கை தொடரும்.

சேலம் மாநகரில் வசிக்கும் பொதுமக்கள் யாருக்கேனும் ரவுடிகளால் அச்சுறுத்தல், மிரட்டல் வந்தால் அவர்கள் சேலம் மாநகர போலீஸ் கமி‌ஷனர் அலுவலகத்தில் நேரில் வந்த தங்களது புகாரை கொடுக்கலாம். ரவுடிகள் மீதான நடவடிக்கை தொடரும். இவ்வாறு அவர் கூறினார்.

சேலம் மாநகரில் ரவுடிகள் வேட்டை தொடங்கி உள்ளதால் பிரபல ரவுடிகள் பலர் கலக்கத்தில் உள்ளனர்.  #tamilnews

Tags:    

Similar News