செய்திகள்

உலக தமிழர் எழுத்தாளர் மாநாட்டில் பங்கேற்பு: மு.க.ஸ்டாலின் மலேசியா பயணம்

Published On 2018-02-24 13:19 IST   |   Update On 2018-02-24 13:19:00 IST
மலேசியாவில் 25-ந்தேதி உலக தமிழர் எழுத்தாளர் மாநாடு நடைபெற இருக்கிறது. இதில் பங்கேற்பதற்காக மு.க.ஸ்டாலின் நேற்று இரவு மலேசியா புறப்பட்டு சென்றார்.
ஆலந்தூர்:

தி.மு.க. செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் நேற்று இரவு மலேசியா புறப்பட்டு சென்றார். அப்போது சென்னை விமான நிலையத்தில் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

மலேசியாவில் 25-ந்தேதி உலக தமிழர் எழுத்தாளர் மாநாடு நடைபெற இருக்கிறது. அதில் சிறப்பு அழைப்பாளராக என்னை அழைத்து இருக்கிறார்கள். அழைப்பை ஏற்று செல்கிறேன். காவிரிநீர் பிரச்சனை தொடர்பாக அனைத்து கட்சி கூட்டத்தில் சாதகமான சூழ்நிலைகள் ஏற்படுத்த வேண்டும் என்றுதான் தீர்மானம் நிறைவேற்றி பிரதமரை வலியுறுத்தி உள்ளோம்.

கமல் கட்சி தொடங்கிய விழாவில் பங்கேற்ற டெல்லி முதல்-அமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் தி.மு.க.வை பற்றி பேசி இருந்தார். பாராளுமன்றத்தில் லோக்பால் சட்டம் நிறைவேற்றி ஊழலை ஒழிக்க வேண்டும் என்று போராட்டங்களை நடத்தி பிரபலமானவர் கெஜ்ரிவால். அதனால் டெல்லி முதல்-அமைச்சராக ஆகும் வாய்ப்பு ஏற்பட்டது. அவர் டெல்லி முதல்-அமைச்சரான நாள் முதல் இதுவரை பாராளுமன்றத்தில் லோக்பால் சட்டம் நிறைவேற்ற வேண்டும் என்று குரல் எழுப்பவில்லை.

இவ்வாறு அவர் கூறினார். #Tamilnews

Similar News