செய்திகள்

ஜெயலலிதா பிறந்தநாளையொட்டி ஏழைகளுக்கு நலத்திட்ட உதவி: அமைச்சர் தங்கமணி வழங்கினார்

Published On 2018-02-21 10:06 GMT   |   Update On 2018-02-21 10:06 GMT
ஸ்ரீபெரும்புதூரில் ஜெயல்லிதா பிறந்தநாளையொட்டி ஏழைகளுக்கு நலத்திட்ட உதவிகளை அமைச்சர் தங்கமணி வழங்கினார்.
ஸ்ரீபெரும்புதூர்:

காஞ்சீபுரம் மேற்கு மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் சட்டமன்ற தொகுதி சார்பில் ஜெயலலிதா பிறந்த நாள் விழா மற்றும் ஏழைகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

ஸ்ரீபெரும்புதூர் எம்.எல்.ஏ. மதனந்தபுரம் கே.பழனி தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் வாலாஜாபாத் பா.கணேசன் முன்னிலை வகித்தார்.

ஒன்றிய செயலாளர் எறையூர் முனுசாமி, முன்னாள் ஒன்றிய செயலாளர் போந்தூர் செந்தில்ராஜன், நகர செயலாளர்குமார், முன்னாள் சேர்மன் சிவக்குமார், குன்றத்தூர் ஒன்றிய செயலாளர் எழிச்சூர் ராமச்சந்திரன், ஒன்றிய விவசாய அணி செயலாளர் ராமச்சந்திரன் முன்னிலை வகித்தனர்.

விழாவில் அமைச்சர்கள் தங்கமணி, பென்ஜமின் ஆகியோர் கலந்து கொண்டு ஏழைகளுக்கு தையல் மிஷின், சைக்கிள், இஸ்திரிபெட்டி, வேட்டி-சேலை ஆகியவற்றை வழங்கி சிறப்புரையாற்றினர்.

அமைப்பு செயலாளர்கள் வி.சோமசுந்தரம், மைதிலி, ராமச்சந்திரன் எம்.பி., மாவட்ட அம்மா பேரவை செயலாளர் சோமசுந்தரம், மாவட்ட துணை செயலாளர் ரமேஷ், மாவட்ட அவைத் தலைவர் கிருஷ்ணமூர்த்தி, மாவட்ட இளைஞர் அணி செயலாளர் சத்தியா,

ஸ்ரீபெரும்புதூர் கூட்டுறவு வங்கி இயக்குனர் போந்தூர் சேட்டு, தொழிலதிபர் வடகால் சவரிங்கன், மாவட்ட பிரதிநிதி உலக நாதன், மாவட்ட இலக்கிய அணி துணை செயலாளர் கோபாலகிருஷ்ணன், ஒன்றிய பொருளாளர் அர்ஜுனன், ஒன்றிய துணை செயலாளர் தமிழ்செல்வி முனுசாமி, மாவட்ட பிரதிநிதி மாரி, ஒன்றிய இளைஞர் அணி செயலாளர் கணேசன், ஒன்றிய இளைஞர் பாசறை செயலாளர் அன்பரசன், திருமங்கலம் அன்பு,

வளர்புரம் கிளை செயலாளர் தங்கமணி, எடையார்பாக்கம் முன்னாள் தலைவர் மூர்த்தி, முன்னாள் கவுன் சிலர் பாபு, பாலமுருகன், மாவட்ட தொழில் நுட்ப பிரிவு இணை செயலாளர் சிவசக்தி, துணைத் தலைவர் சார்லஸ் உள்பட பலர் கலந்து கொண்டனர். #tamilnews
Tags:    

Similar News