செய்திகள்

போட்டித் தேர்வு முறைகேடு புகார்: தமிழக தலைமைச் செயலர் பதிலளிக்க ஐகோர்ட் மதுரை கிளை உத்தரவு

Published On 2018-01-30 07:43 GMT   |   Update On 2018-01-30 07:43 GMT
தமிழக அரசு நடத்தம் போட்டித் தேர்வுகளில் முறைகேடு நடப்பதாக வெளியான புகார் தொடர்பாக தமிழக தலைமை செயலர் பதிலளிக்கும்படி ஐகோர்ட் மதுரை கிளை நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.
மதுரை:

தமிழகத்தில் டி.என்.பி.எஸ்.சி., டி.ஆர்.பி., டெட் உள்ளிட்ட தேர்வுகளில் முறைகேடு நடப்பதாக செய்திகள் வெளியாகின. பாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வில் முறைகேடு நடந்திருப்பதும் ஏற்கனவே வெளிச்சத்திற்கு வந்துள்ளது. இதன் அடிப்படையில் உயர்நீதிமன்ற மதுரை கிளை தாமாக முன்வந்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது.

இவ்வழக்கை இன்று விசாரித்த நீதிபதிகள்,  அரசு பணிக்கான போட்டி தேர்வுகளில் பணம் கொடுத்து வேலை வாங்குவோர் எப்படி ஒழுங்காக வேலை செய்வார்கள்?  என்று கேள்வி எழுப்பினர்.

தமிழக அரசு நடத்தும் தேர்வு முறைகேடு விவகாரத்தில் எத்தனை வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன? எத்தனை பேர் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள்?  என்றும் நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.

இதுபற்றி தலைமைச் செயலர், சி.பி.ஐ. மற்றும் லஞ்ச ஒழிப்புத்துறை இயக்குனர் பிப்ரவரி16-ல் பதிலளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டு வழக்கை ஒத்திவைத்தனர். #tamilnews
Tags:    

Similar News