செய்திகள்
விவசாயிகள் மெழுகுவர்த்தி ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

வங்கி கடனை ரத்து செய்யக்கோரி விவசாயிகள் மெழுகுவர்த்தி ஏந்தி போராட்டம்

Published On 2017-11-14 04:17 GMT   |   Update On 2017-11-14 04:17 GMT
காட்டுமன்னார்கோவிலில் வங்கி கடனை ரத்து செய்யக்கோரி விவசாயிகள் மெழுகுவர்த்தி ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ஸ்ரீமுஷ்ணம்:

வங்கிகளில் விவசாயிகள் வாங்கிய கடன்கள் அனைத்தையும் தள்ளுபடி செய்ய வேண்டும். விவசாயிகளின் விளை பொருட்களுக்கு அரசு நல்ல விலை வழங்க வேண்டும் என்று விவசாய சங்கத்தினர் கோரிக்கை விடுத்து வந்தனர்.

தங்களது கோரிக்கைகளை நிறைவேற்றக்கோரி கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் பஸ் நிலையம் அருகே சிதம்பரம் நெடுஞ்சாலையில் நேற்று இரவு போராட்டத்தில் ஈடுபட்டனர். கையில் மெழுகுவர்த்தி ஏந்தி ஆர்ப்பாட்டம் செய்தனர்.

காவிரி டெல்டா பாசன விவசாயிகளின் கூட்டமைப்பின் தலைவர் இளங்கீரன் தலைமை தாங்கினார். இதில் ஏராளமான விவசாயிகள் கலந்து கொண்டனர்.

இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி வருகிற 20-ந் தேதி (திங்கட்கிழமை) டெல்லி ராம்லீலா மைதானத்தில் விவசாயிகள் சார்பில் போராட்டம் நடத்தப்படும்.

21-ந் தேதி விவசாயிகள் ஒன்று திரண்டு டெல்லியில் போட்டி பாராளுமன்ற கூட்டமும், 22-ந் தேதி பெண்கள் கலந்து கொள்ளும் போட்டி பாராளுமன்ற கூட்டமும் நடைபெறும்.

இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.
Tags:    

Similar News