செய்திகள்
சதீஷ்குமார்

முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியை விமர்சித்து பேஸ் புக்கில் அவதூறு: சீர்காழி வாலிபர் கைது

Published On 2017-10-12 09:47 IST   |   Update On 2017-10-12 09:47:00 IST
முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியை விமர்சித்து பேஸ் புக்கில் அவதூறு பரப்பிய சீர்காழி வாலிபரை கைது செய்த போலீசார் விசாரணை நடத்த சென்னைக்கு அழைத்து சென்றனர்.
சீர்காழி:

நாகை மாவட்டம் சீர்காழி அருகே நாராயணபுரத்தை சேர்ந்தவர் சதீஷ்குமார் (வயது 32). இவர் மங்கை மடத்தில் இண்டெர்நெட் சென்டர் நடத்தி வருகிறார்.

இந்த நிலையில் அவர் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, மற்றும் அமைச்சர் ஜெயகுமார் ஆகியோர் குறித்து பேஸ் புக்கில் விமர்சித்து அவதூறு பரப்பியதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து சென்னை சைபர் கிரைம் போலீசாருக்கு புகார் சென்றது. இதைதொடர்ந்து சென்னை சைபர் கிரைம் போலீசார் , நாராயணபுரத்துக்கு வந்து வாலிபர் சதீஷ்குமாரை கைது செய்தனர். பின்னர் அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்த சென்னைக்கு அழைத்து சென்றனர்.




Similar News