செய்திகள்

திருத்தணி அருகே வேன்-லாரி மோதல்: 25 பேர் படுகாயம்

Published On 2017-08-31 11:56 IST   |   Update On 2017-08-31 11:56:00 IST
திருத்தணி அருகே வேனும், லாரியும் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 25 பேர் படுகாயம் அடைந்தனர். அவர்கள் அனைவரும் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

பள்ளிப்பட்டு:

ஸ்ரீபெரும்புதூர் அருகே உள்ள தனியார் நிறுவனத்தில் திருத்தணி மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களை சேர்ந்தவர்கள் வேலை பார்த்து வருகின்றனர்.

நேற்று இரவுப்பணி முடிந்து நள்ளிரவு 2 மணி அளவில் பெண் ஊழியர்கள் உள்பட 23 பேர் வேனில் சொந்த ஊருக்கு புறப்பட்டனர். வேனை திருத்தணியை சேர்ந்த அஜித்குமார் ஓட்டினார்.

திருத்தணியை அடுத்த ஆற்காடுகுப்பம் அருகே வேன் வந்த போது, எதிரே ஆந்திராவில் இருந்து கருவேப்பிலை ஏற்றிக் கொண்டு கோயம்பேடு நோக்கி மினி லாரி வந்தது.

திடீரென வேனும், மினி லாரியும் நேருக்கு நேர் மோதியது. இதில் லாரி டிரைவர் ஆந்திராவை சேர்ந்த கார்த்திக், வேன் டிரைவர் அஜித்குமார் மற்றும் வேனில் இருந்த புதூர் கீதாஞ்சலி, வீரமங்கலம் பேபி, திருத்தணி தென்னரசு உளஅபட 25 பேர் படுகாயம் அடைந்தனர்.

அவர்களை அக்கம் பக்கத்தினர் மீட்டு திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இது குறித்து கனகம்மா சத்திரம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Similar News