செய்திகள்
பவானி அருகே கார் மோதி மில் தொழிலாளி பலி
பவானி அருகே கார் மோதி மில் தொழிலாளி பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பவானி:
பவானி அருகே உள்ள மைலம்பாடி நாராயணபுரத்தை சேர்ந்தவர் வீரப்பன் (வயது 65). இவர் ஒரு ஸ்பின்னிங் மில்லில் பணி புரிந்து வருகிறார்.
வீரப்பன் ஒலகடம் மைலம் பாடி ரோட்டில் நாராயணபுரம் என்ற இடத்தில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது பின்னால் வந்த ஒரு கார் எதிர்பாராத விதமாக மோதியது.
இதில் படுகாயம் அடைந்த அவரை பவானி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.
ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக இறந்தார். இந்த விபத்து குறித்து பவானி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.