செய்திகள்
பலியான மைதிலி

பவானி அருகே மர்ம காய்ச்சலுக்கு இளம்பெண் பலி

Published On 2017-07-26 06:21 GMT   |   Update On 2017-07-26 06:21 GMT
ஈரோடு மாவட்டம் பவானி அருகே மர்ம காய்ச்சலுக்கு இளம்பெண் பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
பவானி:

ஈரோடு மாவட்டத்தில் டெங்கு மற்றும் மர்ம காய்ச்சல் பாதிப்பு உள்ளது. இந்த காய்ச்சலுக்கு பலியானோரின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது.

அந்தியூர், பவானியில் பலியானோர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

நேற்று முன்தினம் அந்தியூர் அருகே உள்ள ராமகவுண்டன்கொட்டாய் பகுதியை சேர்ந்த பவுனாள் மகன் தமிழ்ச்செல்வன் (வயது 12) டெங்கு காய்ச்சல் பாதித்து பலியானார்.

இவர் அங்குள்ள பள்ளியில் 7-ம் வகுப்பு படித்து வந்தார். இதனால் அந்தியூர், பவானியில் மர்ம காய்ச்சலுக்கு பலியானோர் எண்ணிக்கை 13 ஆனது.

இந்த நிலையில் பவானி அருகே ஒரு இளம்பெண் மர்ம காய்ச்சலுக்கு பலியாகி உள்ளார். பவானி தேவபுரம் பகுதியை சேர்ந்த சந்திரன் மகள் மைதிலி (18) கடந்த சில நாட்களாக காய்ச்சலால் அவதிப்பட்டு வந்தார்.

இன்று காலை காய்ச்சல் அதிகமாகி உடல் நிலை மோசமடைந்து இறந்தார். அந்த பகுதியில் நிலவும் சுகாதார சீர்கேடே காய்ச்சல் பரவ காரணமாகியுள்ளது என்று அந்த பகுதி மக்கள் குற்றம் சாட்டினர்.
Tags:    

Similar News