செய்திகள்

சுப்பிரமணியசாமியை விட ரஜினி 2 மடங்கு அறிவாளி: நண்பர் ராஜாபகதூர்

Published On 2017-07-17 13:45 IST   |   Update On 2017-07-17 13:45:00 IST
படித்த சுப்பிரமணியசாமியை விட ரஜினிகாந்துக்கு 2 மடங்கு அறிவு உள்ளது என ரஜினி காந்தின் நண்பர் ராஜாபகதூர் கூறியுள்ளார்.
சென்னை:

நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவது குறித்து ஆலோசனை நடத்தி வரும் நிலையில் அவரை பற்றி பாரதீய ஜனதா மூத்த தலைவர் சுப்பிரமணியசாமி எம்.பி. கடுமையாக விமர்சித்தார்.

ரஜினி படிப்பறிவு இல்லாதவர். அவர் அரசியலுக்கு வராமல் இருப்பதே நல்லது என்று சுப்பிரமணியசாமி கூறினார்.

இதுதொடர்பாக ரஜினிகாந்தின் நீண்டகால நண்பரான ராஜாபகதூரிடம் கேட்டபோது அவர் கூறியதாவது:-

ரஜினிகாந்த்தை பற்றி விமர்சிப்பதற்கு சுப்பிரமணிய சாமிக்கு எந்த தகுதியும் இல்லை. சுப்பிரமணியசாமி எத்தனை தடவை ரஜினிகாந்த்தை சந்தித்து பேசி இருப்பார்.



படித்த சுப்பிரமணியசாமியை விட ரஜினிகாந்துக்கு 2 மடங்கு அறிவு உள்ளது. ரஜினிகாந்துடன் நான் 47 ஆண்டுகளாக நெருங்கி பழகி வருகிறேன். ரஜினியை பற்றி சுப்பிரமணியசாமிக்கு என்ன தெரியும்.

இவ்வாறு ராஜாபகதூர் கூறினார்.

Similar News