செய்திகள்
வேதாரண்யம்: தடுப்பணை கட்டுமான பணியின்போது கிரேன் அறுந்து தொழிலாளி பலி
வேதாரண்யம் அருகே தடுப்பணை கட்டும் போது கிரேன் அறுந்து விழுந்து தொழிலாளி பலியானார். 4 பேர் காயம் அடைந்தனர்.
வேதாரண்யம்:
நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகே உள்ள கள்ளிமேடு அடப்பனாற்றில் ஷட்டருடன் கூடிய தடுப்பணை கட்டும் பணி நடைபெற்று வருகிறது. இதில் ஏராளமான தொழிலாளர்கள் ஈடுபட்டு வருகிறார்கள்.
இன்று காலை 9.30 மணியளவில் தடுப்பணை கட்டும் பணி நடைபெற்றது. அப்போது திடீரென கட்டுமான பணியில் ஈடுபடுத்தப்பட்ட கிரேன் அறுந்து விழுந்தது.
அதில் தொழிலாளர்கள் சிக்கி கொண்டனர். ஆந்திராவை சேர்ந்த சங்கர் ராவ் என்ற தொழிலாளி சம்பவ இடத்திலேயே பலியானார்.
அவருடன் வேலை பார்த்து கொண்டிருந்த 4 பேர் காயம் அடைந்தனர். அவர்களை சக தொழிலாளர்கள் மீட்டு நாகை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.
கிரேன் அறுந்து தொழிலாளி பலியான சம்பவத்தை தொடர்ந்து தடுப்பணை கட்டும் பணி நிறுத்தப்பட்டது. இது குறித்து வேதாரண்யம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
இந்த சம்பவம் தொழிலாளர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.