செய்திகள்
காஞ்சீபுரத்தில் தொண்டர்களுடன் ஓ.பன்னீர்செல்வம் 23-ந் தேதி ஆலோசனை கூட்டம்
காஞ்சீபுரம் மேற்கு மாவட்ட புரட்சித்தலைவி அம்மா அணியின் செயல் வீரர்- வீராங்கனைகள் ஆலோசனை கூட்டம் வருகிற 23-ந்தேதி நடைபெற உள்ளது. இதில் ஓ.பன்னீர் செல்வம் கலந்து கொண்டு ஆலோசனை வழங்குகிறார்.
காஞ்சீபுரம்:
காஞ்சீபுரம் மேற்கு மாவட்ட புரட்சித்தலைவி அம்மா அணியின் செயல் வீரர்- வீராங்கனைகள் ஆலோசனை கூட்டம் வருகிற 23-ந்தேதி காஞ்சீபுரம் அடுத்த முத்தியால்பேட்டையில் நடைபெற உள்ளது.
கூட்டத்தில் கழக பொருளாளர் ஓ.பன்னீர் செல்வம், அவைத்தலைவர் இ.மதுசூதனன், முன்னாள் நிதி அமைச்சர் சி.பொன் னையன், முன்னாள் சபாநாயகர் பி.எச்.பாண்டியன், முன்னாள் அமைச்சர்கள் கே.பி.முனுசாமி, நத்தம் விஸ்வநாதன், செம்மலை, ராஜகண்ணப்பன், மா.பா.பாண்டியராஜன், டாக்டர் வ.மைத்ரேயன் எம்.பி.
முன்னாள் வாரிய தலைவர் ஜே.சி.டி. பிரபாகரன், மனோஜ்பாண்டியன் உள்பட முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டு ஆலோசனை வழங்குகிறார்கள்.
இதற்காக முத்தியால்பேட்டை ஆஞ்சநேயர் கோவில் அருகே சுமார் 5 ஏக்கர் பரப்பளவில் பிரம்மாண்ட ஏற்பாடுகள் நடந்து வருகிறது. கூட்டம் நடைபெறும் இடத்தை வ.மைத்ரேயன் எம்.பி. பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
அப்போது அவருடன் மாவட்ட புரட்சித்தலைவி அம்மா அணி நிர்வாகி முத்தயால்பேட்டை ஆர்.வி. ரஞ்சித்குமார் உள்பட பலர் இருந்தனர்.