செய்திகள்

கிணத்துக்கடவு பகுதியில் ஸ்மார்ட் ரேசன் கார்டுகளுக்கு புகைப்படம் இணைக்கும் பணி தீவிரம்

Published On 2017-07-03 11:24 GMT   |   Update On 2017-07-03 11:24 GMT
கிணத்துக்கடவு பகுதியில் ஸ்மார்ட் ரே‌ஷன் கார்டுகளில் புகைப்படம் இணைக்கும் பணிநடை பெற்று வருகிறது.

கிணத்துக்கடவு:

கிணத்துக்கடவு தாலுகாவில் 44 முழு நேர ரே‌ஷன் கடைகளும், 27 பகுதிநேர ரேசன்கடைகள் என மொத்தம் 71 ரேசன்கடைகள் செயல்பட்டு வருகின்றன. இதில் மொத்தம் 30 ஆயிரத்து 898 ரே‌ஷன் கார்டுகள் உள்ளன.

தமிழகத்தில் நடமாடும் போலி ரே‌ஷன் கார்டுகளை ஒழிக்க தமிழக அரசு ஸ்மார்ட் ரே‌ஷன் கார்டு திட்டத்தை கொண்டு வரப்பட்டுள்ளது. இதன் மூலம் பயனாளிகளுக்கு தாங்கள் பொருள் வாங்கும் ரேசன்கடையில் பொருட்கள் வாங்கிய உடன் நுகர்வோர்களுக்கு அவர்களது மொபைல் போன்களுக்கு குறுஞ் செய்தி அனுப்பப்பட்டு வருகிறது. இதற்காக ரேசன்கார்டு தாரர்கள் தங்களது ஆதார் எண், செல்போன் எண் ஆகியவை பதிவு செய்வது கட்டாயம் ஆக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து கிணத்துக் கடவு குடிமை பொருள் தாசில்தார் ரேணுகாதேவி கூறியதாவது:-

கிணத்துக்கடவு தாலுகாவில் ஸ்மார்ட் ரே‌ஷன் கார்டுகள் வழங்கப்பட்டு வருகிறது. விடுபட்ட நுகர்வோர்களுக்கு சென்னையில் இருந்து ஸ்மார்ட் ரேசன்கார்டுகள் வந்ததும் வழங்கப்படும். தற்போது கிணத்துக்கடவில் 12ஆயிரம் ஸ்மார்ட் ரே‌ஷன் கார்டுகளில் புகைப்படம் இணைக்கும் பணிநடை பெற்று வருகிறது.ரே‌ஷன் கடைகளில் ஓட்டப்பட்டிருக்கும் படிவத்தில் புகைப்படம் இணைக்கப்படாமல் உள்ள ரே‌ஷன் கார்டுகளின் வரிசை எண் ஒட்டப்பட்டுள்ளது. இதனை நுகர்வோர்கள் பார்வையிட்டு புகைப்படம் இணைக்காதவர்கள் , போன்நம்பர் சேர்க்க வேண்டியவர்கள் கிணத்துக்கடவு குடிமை பொருள் தாசில்தார் அலுவலகத்தை அனுகி போட்டோ, போன்நம்பரை இணைத்து கொள்ளலாம்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News