செய்திகள்

ஈஷாவில் நடைபெறும் உலக யோகா தின விழாவில் தமிழக கவர்னர் பங்கேற்பு

Published On 2017-06-19 10:29 IST   |   Update On 2017-06-19 10:29:00 IST
கோவை ஈஷா யோகா மையம் சார்பில் நடத்தப்படும் 3-வது ஆண்டு உலக யோகா தின நிகழ்ச்சியை நாளை மறுநாள் தமிழக கவர்னர் வித்யாசாகர் ராவ் தொடங்கி வைக்கிறார்.
கோவை:

உலக யோகா தினத்தையொட்டி ஆண்டுதோறும் கோவை ஈஷா யோகா மையம் சார்பில் யோகா நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது.

3-வது ஆண்டு உலக யோகா தின நிகழ்ச்சி நாளை மறுநாள் (புதன் கிழமை) காலை 7 மணிக்கு தொடங்கி நடக்கிறது.

இந்த நிகழ்ச்சிக்கு ஈஷா அறக்கட்டளை நிறுவனர் சத்குரு தலைமை தாங்குகிறார்.

மத்திய சுற்றுலா மற்றும் கலாச்சாரத்துறை மந்திரி டாக்டர். மகேஷ் சர்மா சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு சிறப்புரையாற்றுகிறார்.

யோகா நிகழ்ச்சியை தமிழக கவர்னர் வித்யாசாகர் ராவ் தொடங்கி வைத்து 2017-ம் ஆண்டுக்குள் தமிழகத்தில் உள்ள 5 ஆயிரம் பள்ளிகளை சேர்ந்த மாணவ-மாணவிகளுக்கு யோகா கற்று கொடுக்கும் பணியை தொடங்கி வைக்கிறார் .



பின்னர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்களுக்கு சத்குரு யோகா பயிற்சிகளை வழங்குகிறார்.

இதில் முக்கிய பிரமுகர்கள் மற்றும் பொதுமக்கள் ஆயிரக்கணக்கானோர் கலந்து கொள்கிறார்கள்.

Similar News