செய்திகள்
மீத்தேன் திட்டத்தை கைவிடாவிட்டால் புரட்சிக்கரமான போராட்டம் நடத்துவோம்: சீமான்
மீத்தேன் திட்டத்தை மத்திய, மாநில அரசுகள் கைவிடவில்லை என்றால் ஜல்லிக்கட்டு போராட்டம் போன்று இனிவரும் காலங்களில் புரட்சிக்கர போராட்டத்தை தொடங்குவோம் என்று சீமான் கூறி உள்ளார்.
மயிலாடுதுறை:
காவிரி டெல்டா மாவட்டங்களை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்க வேண்டும், கதிராமங்கலம் கிராமத்தில் மீத்தேன் திட்டத்திற்கு எதிராக போராட்டம் நடத்தியவர்களை விரட்டிய போலீசாரை கண்டித்தும், மீத்தேன் திட்ட எதிர்ப்பு கூட்டமைப்பின் தலைமை ஒருங்கிணைப்பாளர் ஜெயராமன் கைது செய்யப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்தும் நாம் தமிழர் கட்சி சார்பில் நாகை மாவட்டம் மயிலாடுதுறையில் ஒருநாள் பட்டினி போராட்டம் நடைபெற்றது. இந்தப் போராட்டத்தில் கலந்து கொண்ட தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் நிருபர்களிடம் கூறியதாவது:-
மக்கள் கருத்துக்களை கேட்டு அதன்பின்புதான் மீத்தேன் திட்டத்தை செயல்படுத்துவோம் என்று மத்திய அரசு கூறியது. ஆனால் கதிராமங்கலத்தில் மக்கள் கருத்துக்களை கேட்காமல் போலீஸ் பாதுகாப்புடன் பணிகள் நடைபெறுகிறது. மீத்தேன் திட்டத்தை எதிர்த்து போராட்டம் நடத்தும் பொதுமக்களை போலீசார் தாக்குகின்றனர். மீத்தேன் திட்டத்தில் தமிழக அரசின் செயல்பாடு என்ன என்பதை விளக்க வேண்டும். சோமாலியா, கம்போடியா போன்ற நாடுகள் மீத்தேன் திட்டத்தால் அழிந்து மனிதனை மனிதன் தின்னும் அவலநிலைக்கு தள்ளப்பட்டுள்ளன. அதுபோன்ற ஒருநிலை தமிழகத்திற்கு வரக்கூடாது என்பதற்காகத்தான் நாங்கள் போராடி கொண்டிருக்கிறோம்.
மீத்தேன் திட்டத்தை மத்திய, மாநில அரசுகள் கைவிடவில்லை என்றால் ஜல்லிக்கட்டு போராட்டம் போன்று இனிவரும் காலங்களில் புரட்சிக்கர போராட்டத்தை தொடங்குவோம். மலேசியாவில் ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ திருப்பி அனுப்பப்பட்டது நாட்டிற்கு அவமானம்.
இவ்வாறு அவர் கூறினார்.