செய்திகள்
செம்பனார் கோவில் அருகே முன்னாள் எம்.எல்.ஏ. வீட்டில் நகை -வெள்ளி கொள்ளை
முன்னாள் எம்.எல்.ஏ.வீட்டில் நடைபெற்ற கொள்ளை சம்பவம் செம்பனார் கோவில் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தரங்கம்பாடி:
நாகை மாவட்டம் பூம்புகார் தொகுதி முன்னாள் அ.தி.மு.க. எம்.எல்.ஏ. ரெங்கநாதன். தற்போது இவர் ஓ. பன்னீர் செல்வம் அணியில் உள்ளார்.
இவரது வீடு செம்பனார் கோவில் அருகே உள்ள பரசலூர் மெயின் ரோட்டில் உள்ளது. ரெங்கநாதன் வீட்டை பூட்டி விட்டு குடும்பத்துடன் சென்னையில் உள்ள தனது மகள் வீட்டிற்கு சென்று இருந்தார்.
இதனை நோட்டமிட்ட கொள்ளை கும்பல் வீட்டின் பின்பக்க கதவை உடைத்து உள்ளே புகுந்தது. வீட்டிற்குள் இருந்த பீரோவை உடைத்து அதில் வைக்கப்பட்டு இருந்த 45 பவுன் நகை, ரூ. 1 லட்சம் மதிப்புள்ள வெள்ளி பொருட்கள், ரூ. 41 ஆயிரம் ரொக்கப் பணம், பட்டுப்புடவைகளை கொள்ளையடித்து சென்றது.
இன்று காலை வீடு திரும்பிய ரெங்கநாதன் வீட்டின் கதவு உடைக்கப்பட்டு கொள்ளை போய் இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
இது குறித்து அவர் செம்பனார் கோவில் போலீசில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் துலோத்துங்கன் மற்றும் போலீசார் அங்கு சென்று பார்வையிட்டனர். கைரேகை நிபுணர்களும் வந்து ரேகைகளை பதிவு செய்தனர்.
கொள்ளையர்களை போலீசார் தேடி வருகிறார்கள். முன்னாள் எம்.எல்.ஏ.வீட்டில் நடைபெற்ற கொள்ளை சம்பவம் செம்பனார் கோவில் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.