செய்திகள்

அ.தி.மு.க.வின் இரு அணிகளும் இணையும்: அமைச்சர் கடம்பூர் ராஜூ

Published On 2017-05-05 10:43 GMT   |   Update On 2017-05-05 10:43 GMT
அ.தி.மு.க.வின் இரு அணிகளும் சரியான சூழ்நிலை வரும் போது இணையும் என கடலூரில் அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்துள்ளார்.
கடலூர்:

அமைச்சர் கடம்பூர் ராஜூ கடலூர் வந்தார். அப்போது அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-

அ.தி.மு.க.வின் இரு அணிகளும் சரியான சூழ்நிலை வரும் போது இணையும். எம்.ஜி.ஆர். மறைந்த போது அ.தி.மு.க.வில் 2 அணிகள் உருவாகியது. அதன்பிறகு 2 அணிகளும் சேர்ந்தது. அதேபோல் தற்போதும் 2 அணிகளும் இணைய வாய்ப்பு உள்ளது. தமிழகத்தில் அரசியல் மாற்றத்துக்கு தற்போது அவசியமும் இல்லை, தேவையும் இல்லை.

இவ்வாறு அவர் கூறினார்.

தமிழகத்தில் ரூ.100 கோடி செலவில் பல்வேறு நினைவுச்சின்னங்கள் அமைக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில், கடலூர் மாவட்டத்தில் சகஜானந்தா மணிமண்டபம், திண்டுக்கல்லில் திப்புசுல்தான், கயத்தாறில் வீரபாண்டிய கட்டபொம்மன் போன்ற தலைவர்களுக்கு நினைவு மண்டபம் அமைக்கப்பட உள்ளது.

மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் எண்ணங்களை நிறைவேற்றும் விதமாக இந்த அரசு செயல்பட்டு கொண்டிருக்கிறது.

சென்னை, கோவை, திருநெல்வேலி உள்பட 10 ஊர்களில் ஆண்டுதோறும் அரசு பொருட்காட்சி நடத்தப்பட்டு வருகிறது. கடலூர் உள்பட 3 ஊர்களில் சுழற்சி முறையில் பொருட்காட்சி நடத்தப்படுகிறது. அதன்படி கடலூரில் பொருட்காட்சி நடக்கிறது. இனி கடலூரில் ஆண்டுதோறும் தொடர்ந்து பொருட்காட்சி நடத்த நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.
Tags:    

Similar News