செய்திகள்

தமிழக அரசு பணிகளில் சுணக்கம் இல்லை: மு.க.ஸ்டாலினுக்கு அமைச்சர் தங்கமணி பதில்

Published On 2017-04-30 05:13 GMT   |   Update On 2017-04-30 05:13 GMT
தமிழக அரசு பணிகளில் சுணக்கம் இல்லை, எவராலும் அசைக்க முடியாத அளவில் நாங்கள் இணைந்து செயல்பட்டு புதிய வரலாற்றை படைப்போம் என்று மு.க.ஸ்டாலினுக்கு அமைச்சர் தங்கமணி பதில் அளித்துள்ளார்.
ஈரோடு:

ஈரோட்டில் நடந்த ஒரு தனியார் கல்லூரி விழாவில் அமைச்சர் தங்கமணி கலந்து கொண்டு பேசியதாவது:-

கடந்த தி.மு.க. ஆட்சியில் தமிழகம் இருண்ட மாநிலமாக இருந்தது. மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா இந்த நிலையை மாற்றி தமிழ்நாட்டை மின்மிகை மாநிலமாக மாற்றினார். இதன்காரணமாக தமிழகம் மின்தடை இல்லாத மாநிலமாக இருந்து வருகிறது.




கடந்த 26-ந் தேதி சென்னையில் ஒரு பகுதியில் மின்பாதை கம்பி அறுந்ததால் இரவு 9 மணியளவில் மின்தடை ஏற்பட்டது. இதை எதிர்க்கட்சியை சேர்ந்தவர் (மு.க. ஸ்டாலின்) விமர்சனம் செய்தார். தமிழக அரசு மிகவும் மெதுவாக செயல்படுவதாகவும், பணிகளில் சுணக்கம் உள்ளது என்றும் கூறினார்.



ஆனால் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி கடந்த 70 நாட்களாக 1000-க்கும் மேற்பட்ட கோப்புகளில் கையெழுத்திட்டு உள்ளார். பணிகளும் சுணக்கமின்றி நடந்து வருகிறது. வட சென்னையில் மின் துண்டிப்பு ஏற்பட்ட சில நிமிடங்களிலேயே முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி கேட்டு கொண்டதற்கிணங்க மின்வாரிய தலைமை அலுவலகத்துக்கு சென்றேன்.

அதிகாலை 3.30 மணி வரை இரவு முழுவதும் அங்கேயே இருந்து பிரச்சினையை தீர்த்து மின்சாரம் வரும் நிலைமையை ஏற்படுத்திய பின்பே புறப்பட்டு சென்றேன்.

இவ்வாறு அவர் பேசினார்.

நாங்கள் பாசத்தால் பிணைந்து இருக்கிறோம். ஒருவருக்கொருவர் அன்புடன் இருக்கிறோம். எவராலும் அசைக்க முடியாத அளவில் நாங்கள் இணைந்து செயல்பட்டு புதிய வரலாற்றை படைப்போம்.

இவ்வாறு அவர் பேசினார்.

Tags:    

Similar News