செய்திகள்
முன்னாள் அமைச்சர் கே.வி.ராமலிங்கம்

தினகரன் மீதான வழக்கு 100 சதவீதம் பொய்யானது: முன்னாள் அமைச்சர் கே.வி.ராமலிங்கம்

Published On 2017-04-27 15:28 IST   |   Update On 2017-04-27 15:28:00 IST
டி.டி.வி. தினகரன் மீது போடப்பட்டுள்ள வழக்கு 100 சதவீதம் பொய்யானது. இந்த வழக்கில் இருந்து அவர் விரைவில் விடுதலை ஆவார் என முன்னாள் அமைச்சர் கே.வி.ராமலிங்கம் கூறியுள்ளார்.
ஈரோடு:

ஈரோடு திண்டல் செங்கோடம்பள்ளம் பகுதியில் சுப்பிரமணியன், சிவக்குமார், செந்தில், கிருஷ்ண மூர்த்தி, அர்ஜூனன் ஆகிய 5 பேரின் குடிசை வீடுகள் தீ விபத்தில் எரிந்து நாசமானது.

இந்த தீ விபத்து நடந்த இடத்தை பார்வையிட ஈரோடு மேற்கு தொகுதி எம்.எல்.ஏ.வும், முன்னாள் அமைச்சருமான கே.வி.ராமலிங்கம் சென்றார். பாதிக்கப்பட்ட 5 பேருக்கு தலா ரூ. 3 ஆயிரம் வழங்கினார்.

பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

தீ விபத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு குடிசை மாற்று வாரியம் மூலம் பட்டா வழங்க ஏற்பாடு செய்யப்படும். ஈரோடு அரசு ஆஸ்பத்திரி அருகே மேம்பாலம் கட்டும் பணி அடுத்த வாரம் தொடங்கும்.

அ.தி.மு.க. அணிகள் இணைப்பு பேச்சுவார்த்தை விரைவில் சுமூகமான முறையில் நடக்கும். டி.டி.வி. தினகரன் மீது போடப்பட்டுள்ள வழக்கு 100 சதவீதம் பொய்யானது. இந்த வழக்கில் இருந்து அவர் விரைவில் விடுதலை ஆவார்.

இவ்வாறு அவர் கூறினார்.

அப்போது முன்னாள் துணை மேயர் கே.சி. பழனிச்சாமி, பெரியார்நகர் அ.தி.மு.க. செயலாளர் மனோகரன், தாசில்தார் ஜெயக்குமார் ஆகியோர் உடன் இருந்தனர்.

Similar News