செய்திகள்

ரூ. 20 லட்சம் மதிப்புள்ள வாழைகள் நாசம் இழப்பீடு கேட்டு விவசாயிகள் கண்ணீர்

Published On 2017-04-26 11:12 IST   |   Update On 2017-04-26 11:12:00 IST
வெள்ளாங்கோவில் ஆகிய இடங்களில் பயிரிடப்பட்டு அறுவடைக்கு தயாராக இருந்த 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாழை மரங்கள் சேதம் விவசாயிகளை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

கோபி:

கோபி மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் நேற்று முன்தினம் இரவு சூறாவளி காற்றுடன் மழை பெய்தது. சூறாவளி காற்று காரணமாக பல இடங்களில் விவசாய பயிர்கள் சேதம் அடைந்தன.

பொலவக்காளிபாளையம், கடுக்காம்பாளையம், காளாங்காட்டூர், வெள்ளாங்கோவில் ஆகிய இடங்களில் பயிரிடப்பட்டு அறுவடைக்கு தயாராக இருந்த 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாழை மரங்கள் சாய்ந்தன. இதன் மதிப்பு ரூ. 20 லட்சம் ஆகும்.

இந்த சேதம் விவசாயிகளை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. இது பற்றி அவர்கள் கூறியதாவது:-

அறுவடைக்கு தயாராக இருந்த வாழை மரங்கள் சூறாவளிக்கு சேதம் அடைந்துள்ளன. இந்த சேதத்துக்கு மத்திய, மாநில அரசுகள் உரிய இழப்பீடு வழங்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கண்ணீருடன் கூறினர். சூறாவளி காற்று காரணமாக வெள்ளாங்கோவிலில் இருந்து கோபி செல்லும் சாலையில் வெள்ளை வேல மரம் முறிந்து விழுந்தது.

Similar News