செய்திகள்
பிடிபட்ட 6 அடி நீள ராட்சத மண்ணுளி பாம்பை படத்தில் காணலாம்.

துடியலூரில் 6 அடி நீள ராட்சத மண்ணுளி பாம்பு பிடிபட்டது

Published On 2017-04-18 11:43 IST   |   Update On 2017-04-18 11:43:00 IST
துடியலூரில் 6 அடி நீள ராட்சத மண்ணுளி பாம்பு பிடிபட்டது. வனத்துறையினர் மற்றும் வேட்டைத்தடுப்பு காவலர்கள் சம்பவ இடத்திற்கு வந்து ராட்சத மண்ணுளி பாம்பை மீட்டனர்.
கவுண்டம்பாளையம்:

கோவை துடியலூர் அருகே மோட்டார் சைக்கிள் ஒர்க்ஷாப் உள்ளது. நேற்று இரவு ஊழியர்கள் வேலை முடிந்து கடையை மூட முயன்றனர். அப்போது கடையின் பின்புறம் உள்ள காட்டுப்பகுதியில் இருட்டில் ஏதோ ஊர்வதுபோல் ஊழியர்கள் உணர்ந்தனர்.

லைட் அடித்து பார்த்தபோது 6 அடி நீளத்துக்கு மேல் ராட்சத பாம்பு இருப்பதை கண்டு அலறியடித்து ஓட்டம் பிடித்தனர்.

சிறிது நேரத்திற்கு பின்னரும் அதே இடத்தில் இருந்து அந்த பாம்பு நகராமல் இருப்பது கண்டு ஆச்சர்யம் அடைந்து அருகில் வந்து பார்த்தனர். இருபுறமும் தலை உள்ள ராட்சத மண்ணுளி பாம்பு என்பது தெரியவந்தது. இரை அதிகமாக உண்டதால் பாம்பால் நகரமுடியாமல் அங்கேயே இருந்தது.

அதனை சாக்குபையில் லாவகமாக பிடித்தனர். இரவு நேரம் என்பதால் அதனை வாளியில் மண் நிரப்பி பத்திரமாக வைத்தனர்.

இன்று காலை இது குறித்து வனத்துறைக்கு தகவல் தெரிவித்தனர். வனத்துறையினர் மற்றும் வேட்டைத்தடுப்பு காவலர்கள் சம்பவ இடத்திற்கு வந்து ராட்சத மண்ணுளி பாம்பை மீட்டனர். பின்னர் மேற்கு தொடர்ச்சி மலையில் உள்ள பொன்னூத்து மலைப்பகுதியில் பத்திரமாக விட்டனர்.



Similar News