செய்திகள்

தேர்வில் தோல்வி அடைந்ததால் கல்லூரி மாணவி வி‌ஷம் குடித்து தற்கொலை

Published On 2017-03-31 17:07 IST   |   Update On 2017-03-31 17:07:00 IST
பெண்ணாடத்தில் தேர்வில் தோல்வி அடைந்ததால் மனவருத்தத்தில் இருந்த கல்லூரி மாணவி வி‌ஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

பெண்ணாடம்:

கடலூர் மாவட்டம் பெண்ணாடம் சோழன் நகரை சேர்ந்தவர் மணிவாசகம். கூலித் தொழிலாளி. இவரது மகள் சோனியா(வயது 20). பெரம்பலூரில் உள்ள தனியார் கல்லூரியில் பி.எஸ்.சி. மூன்றாமாண்டு படித்து வந்தார்.

செமஸ்டர் தேர்வில் சோனியா 2 பாடங்களில் தோல்வி அடைந்தார். இதனால் மனவருத்தத்தில் இருந்தார். கடந்த 28-ந் தேதி வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் அவர் வி‌ஷம் குடித்தார்.

மயங்கி விழுந்த அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் விருத்தாசலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது.

பின்னர் மேல்சிகிச்சைக்காக சென்னை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சோனியாவுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இருப்பினும் சிகிச்சை பலனின்றி நேற்று இரவு 7 மணியளவில் சோனியா பரிதாபமாக இறந்தார்.

இதுகுறித்து பெண்ணாடம் போலீசில் புகார் செய்யப்பட்டது. சப்-இன்ஸ்பெக்டர் புருசோத்தமன் விசாரணை நடத்தினார்.

Similar News