செய்திகள்

கடலூரில் கல்லூரி வளாகத்தில் வி‌ஷம் குடித்த மாணவி: ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை

Published On 2017-03-28 13:59 GMT   |   Update On 2017-03-28 13:59 GMT
கல்லூரியில் மாணவி வி‌ஷம் குடித்து மயங்கி விழுந்த சம்பவம் கடலூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கடலூர்:

விழுப்புரம் மாவட்டம் திருநாவலூரைச் சேர்ந்தவர் கோவிந்தராஜ். இவரது மகள் மகாலட்சுமி (வயது 21). இவர் கடலூர் தேவனாம்பட்டினத்தில் உள்ள பெரியார் அரசு கலைக்கல் லூரியில் பி.காம். 3-ம் ஆண்டு படித்து வருகிறார்.

தினமும் கல்லூரிக்கு பஸ்சில் வந்து செல்வார். வழக்கம்போல் இன்று காலை மகாலட்சுமி கல்லூரிக்கு வந்தார். 11.30 மணி அளவில் கல்லூரி வகுப்பறையில் இருந்து வெளியே சென்ற அவர் கல்லூரி வளாகத்தில் மயங்கி விழுந்தார்.

இதைப்பார்த்த மற்ற மாணவிகள் அதிர்ச்சி அடைந்தனர். கல்லூரி பேராசிரியர்களிடம் தகவல் தெரிவித்தனர். பின்னர் மாணவி மகாலட்சுமியை கடலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.

அங்கு அவரை டாக்டர்கள் பரிசோதித்து பார்த்தனர். அப்போது மாணவி மகாலட்சுமி வி‌ஷம் குடித்து இருப்பது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இது குறித்து தேவனாம்பட்டினம் போலீசில் புகார் செய்யயப்பட்டது. போலீசார் கல்லூரிக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர்.

மாணவி மகாலட்சுமி கல்லூரி வளாகத்தில் வி‌ஷம் குடித்து இருக்கலாம் என்று போலீசார் கருதுகின்றனர். மாணவி எதற்காக வி‌ஷம் குடித்தார்? என்று தெரியவில்லை. இது தொடர்பாக போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கல்லூரியில் மாணவி வி‌ஷம் குடித்து மயங்கி விழுந்த சம்பவம் கடலூரில் பெரும் பரபரப்பை ஏற் படுத்தி உள்ளது.

Similar News