செய்திகள்

இலங்கை கடற்படையை கண்டித்து நாகை மீனவர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி போராட்டம்

Published On 2017-03-14 10:41 IST   |   Update On 2017-03-14 10:41:00 IST
இலங்கை கடற்படையை கண்டித்து நாகை மீனவர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி போராட்டம் நடத்தினர். இன்று 2-வது நாளாக உண்ணாவிரதம் நடைபெற்றது.

நாகப்பட்டினம்:

ராமேசுவரம் தங்கச்சிமடம் மீனவர் பிரிட்ஜோ இலங்கை கடற்படையால் சுட்டுக் கொல்லப்பட்டதை கண்டித்தும், இலங்கையில் சிறை வைக்கப்பட்டுள்ள 142 தமிழக மீனவர்களின் விசைப்படகுகளை விடுவிக்க கோரியும் நாகை தலைமை தபால் நிலையம் முன் மீனவர்கள் காலவரையற்ற உண்ணாவிரத போராட்டம் நடத்தி வருகிறார்கள்.

நேற்று இரவு அவர்கள் இலங்கை கடற்படையை கண்டித்து மெழுகுவர்த்தி ஏந்தி போராட்டம் நடத்தினர். இதில் ஏராளமான மீனவர்கள் கலந்து கொண்டனர்.

இன்று (செவ்வாய்கிழமை) 2-வது நாளாக உண்ணாவிரதம் நடைபெற்று வருகிறது.இதில் பழையாறு, திருமுல்லைவாசல், பூம்புகார், வானகிரி, தரங்கம்பாடி, நம்பியார் நகர், ஆரிய நாட்டு தெரு, அக்கரைப்பேட்டை, கீச்சாங்குப்பம், கல்லார், வேளாங்கண்ணி, செருதூர், வெள்ளப்பள்ளம், வேதாரண்யம், கோடியக்கரை உள்ளிட்ட மீனவ கிராமங்களை சேர்ந்த ஆயிரக்கணக்கான மீனவர்கள் கலந்து கொண்டனர்.

மீனவர்கள் கடலுக்கு செல்லாததால் மீன் மார்க்கெட்டுகள் வெறிச்சோடி காணப்பட்டது. பல கோடி மீன் வர்த்தகம் பாதிக்கப்பட்டு உள்ளது.

Similar News