செய்திகள்

இலங்கை கடற்படையை கண்டித்து நாகை மாவட்ட மீனவர்கள் காலவரையற்ற உண்ணாவிரதம்

Published On 2017-03-13 10:24 IST   |   Update On 2017-03-13 10:24:00 IST
இலங்கை கடற்படையை கண்டித்து நாகை மாவட்ட மீனவர்கள் இன்று காலவரையற்ற வேலை நிறுத்தத்தை தொடங்கினார்கள்.
நாகப்பட்டினம்:

இலங்கை கடற்படையால் ராமேசுவரம் தங்கச்சி மடத்தை சேர்ந்த மீனவர் பிரிட்ஜோ சுட்டுக் கொல்லப்பட்டார்.



இதற்கு கண்டனம் தெரிவித்து தங்கச்சி மடத்தில் உள்ள மீனவர்கள் உள்பட ஏராளமானோர் அறவழிப்போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து தஞ்சை, நாகை, திருவாரூர், புதுக்கோட்டை, காரைக்கால் ஆகிய மாவட்டங்களை சேர்ந்த மீனவர்கள் தொடர் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இன்று 7-வது நாளாக நாகை மீனவர்கள் கட லுக்கு செல்லவில்லை. இதனால் பைபர் மற்றும் விசைப்படகுகள் கரையில் நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளது.

தங்கச்சி மடம் மீனவரை சுட்டுக் கொன்ற இலங்கை கடற்படையை கண்டித்தும், மீனவர் குடும்பத்துக்கு உரிய இழப்பீடு வழங்க வலியுறுத்தியும், இலங்கை கடற்படையால் பறிமுதல் செய்யப்பட்ட தமிழக மீனவர்களின் விசைப்படகுகளை ஒப்படைக்க வேண்டும்.

மீனவர்களின் வாழ்வாதாரத்தை பாதிக்கும் டீசல் விலை உயர்வை கட்டுப்படுத்த வலியுறுத்தியும் 5 மாவட்ட மீனவர்கள் இன்று முதல் தொடர் வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவது என முடிவு செய்யப்பட்டது.

அதன்படி நாகை மாவட்ட மீனவர் சங்கங்கள் சார்பில் நாகை தலைமை தபால் நிலையம் முன் இன்று (திங்கட்கிழமை) காலை 8 மணிக்கு உண்ணாவிரதம் தொடங்கியது.

இதில் மாவட்டம் முழுவதிலும் இருந்து சுமார் 3 ஆயிரம் மீனவர்கள் கலந்து கொண்டனர். இதற்காக பிரமாண்ட பந்தல் அமைக்கப்பட்டு இருந்தது.

இதே போல் தஞ்சை மாவட்டம் அதிராம் பட்டினம், மல்லிப்பட்டினம், சேதுபாவா சத்திரம் பகுதி மீனவர்களும் இன்று காலை தொடர் வேலை நிறுத்தத்தை தொடங்கினர்.

Similar News