செய்திகள்

இலங்கை கடற்படையை கண்டித்து நாகை மீனவர்கள் நாளை உண்ணாவிரதம்

Published On 2017-03-12 04:01 GMT   |   Update On 2017-03-12 04:01 GMT
இலங்கை கடற்படையை கண்டித்து நாகை மீனவர்கள் நாளை உண்ணாவிரதம் மேற்கொள்கிறார்கள்.
நாகப்பட்டினம்:

ராமேசுவரம் தங்கச்சிமடத்தை சேர்ந்த மீனவர் பிரிட்ஜோ, இலங்கை கடற்படையால் சுட்டுக் கொல்லப்பட்டதை கண்டித்து நாகை மீனவர்கள் இன்று 6-வது நாளாக வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு உள்ளனர்.

இதனால் 1800 விசைப்படகுகளும், 8 ஆயிரம் பைபர் படகுகளும் கடலுக்கு செல்லவில்லை. நாகப்பட்டினம் மீனவர் சங்க பிரதிநிதிகள் நேற்று முன்தினம் தங்கச்சி மடத்துக்கு சென்று அங்கு போராட்டம் நடத்தி வரும் மீனவர்களுக்கு தங்கள் ஆதரவை தெரிவித்தனர்.

அடுத்த கட்டமாக இலங்கை கடற்படையை கண்டித்தும், தொடர் தாக்குதலுக்கு முற்றுப்புள்ளி வைக்க நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும், உரிய நடவடிக்கை எடுக்காத மத்திய, மாநில அரசுகளை கண்டித்து நாளை (திங்கட்கிழமை) உண்ணாவிரதம் மேற்கொள்கிறார்கள்.

நாகப்பட்டினம் தலைமை தபால் நிலையம் அருகில் இந்த உண்ணாவிரதம் நடைபெறுகிறது. இதில் ஏராளமான மீனவர்கள் கலந்து கொள்கிறார்கள்.

Similar News