செய்திகள்
கலெக்டர் அலுவலகம் முன்பு நடிகர் ராதாரவியை கண்டித்து மாற்றுத்திறனாளிகள் இன்று ஆர்ப்பாட்டம் செய்தனர்.

நடிகர் ராதாரவியை கண்டித்து மாற்றுத்திறனாளிகள் ஆர்ப்பாட்டம்

Published On 2017-03-06 16:45 IST   |   Update On 2017-03-06 16:45:00 IST
நடிகர் ராதாரவியின் பேச்சைக் கண்டித்து கடலூரில் கலெக்டர் அலுவலகம் முன்பு கருப்பு பேட்ஜ் அணிந்து மாற்றுத்திறனாளிகள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
கடலூர்:

சென்னையில் நடிகர் ராதாரவி மாற்றுத்திறனாளிகளை இழிவுபடுத்தும் வகையில் பேசியதாக மாற்றுத்திறனாளிகள் குற்றம் சாட்டியுள்ளனர். ராதாரவி மீது நடவடிக்கை எடுக்கும்படி தேனாம்பேட்டை போலீசில் புகார் செய்துள்ளனர்.

இதைத்தொடர்ந்து நடிகர் ராதாரவி மீது சட்டப்படி போலீசார் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி கடலூரில் கலெக்டர் அலுவலகம் முன்பு கடலூர் துறைமுகம் பச்சையாங்குப்பம் பகுதியை சேர்ந்த மாற்றுத்திறனாளிகள், லட்சிய முன்னேற்ற சங்க நிர்வாகிகள் கருப்பு பேட்ஜ் அணிந்து ஆர்ப்பாட்டம் செய்தனர்.

மாவட்ட தலைவர் சந்தோஷ் தலைமை தாங்கினார். பொதுச்செயலாளர் பொன்.சண்முகம் உள்பட நிர்வாகிகள் கலந்து கொண்டனர். ராதாரவி மீது போலீசார் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி கோ‌ஷமிட்டனர். பின்னர் அவர்கள் கலெக்டர் ராஜேசை சந்தித்து கோரிக்கை மனு கொடுத்தனர்.

Similar News