செய்திகள்
அச்சரப்பாக்கத்தில் 17 வயது சிறுமியின் திருமணம் தடுத்து நிறுத்தம்
அச்சரப்பாக்கத்தில் 17 வயது சிறுமியின் திருமணம் தடுத்து நிறுத்தப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
மதுராந்தகம்:
அச்சரப்பாக்கத்தை அடுத்த தேனபாக்கம் கிராமத்தை சேர்ந்தவர் மாரியப்பன்.
இவருக்கும் திண்டிவனம் அருகே உள்ள ஓங்கூரை சேர்ந்த 17 வயது சிறுமிக்கும் இன்று அச்சரப்பாக்கத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் திருமணம் செய்ய இரு வீட்டு பெற்றோரும் முடிவு செய்து இருந்தனர்.
நேற்று இரவு மணமக்கள் வரவேற்பு நிகழ்ச்சி திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இதில் இருதரப்பு உறவினர்களும் ஏராளமானோர் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர்.
இதனிடையே மணமகளுக்கு 17 வயது தான் ஆவதாக விழுப்புரம் மாவட்ட குழந்தைகள் நல அதிகாரிக்கு புகார் வந்தது. இது பற்றி அவர்கள் காஞ்சீபுரம் மாவட்ட அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர்.
இதையடுத்து மதுராந்தகம் தாசில்தார் கற்பகம், மேல்மருவத்தூர் மகளிர் இன்ஸ்பெக்டர் கலைச்செல்வி மற்றும் அதிகாரிகள் நேற்று இரவு திருமண மண்டபத்திற்கு வந்தனர். இதற்குள் திருமண வரவேற்பு நிகழ்ச்சி முழுவதும் முடிந்து இருந்தது.
இருதரப்பு உறவினர்களையும் அதிகாரிகள் அழைத்து விசாரணை நடத்தினர். அப்போது மணமகளுக்கு 17 வயது ஆவதால் திருமணம் நடத்தக்கூடாது. உரிய வயது அடைந்ததும் திருமணம் நடத்துமாறு தெரிவித்தனர்.
இதனை மணமக்களின் பெற்றோர் ஏற்று இன்று நடைபெற இருந்த திருமணத்தை நிறுத்தினர். பின்னர் இரவே திருமண மண்டபத்தில் இருந்து பொருட்களை எடுத்து சென்று விட்டனர்.
இதனால் இன்று திருமண நிகழ்ச்சி நடைபெறும் என்று எதிர்பார்த்து வந்த சிலர் ஏமாற்றம் அடைந்தனர். சிறுமியின் திருமணம் தடுத்து நிறுத்தப்பட்ட சம்பவம் அச்சரப்பாக்கம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.