செய்திகள்

ஈங்கூர் மாரியம்மன் கோவில் வேப்பமரத்தில் வடியும் பால்: பக்தர்கள் பரவசம்

Published On 2017-01-30 10:50 GMT   |   Update On 2017-01-30 10:50 GMT
ஈங்கூர் மாரியம்மன் கோவில் வேப்பமரத்தில் பால் வடிந்தது. இதை பார்த்து கோவிலுக்கு சாமி கும்பிட வந்த பக்தர்கள் பரவசமடைந்தனர்.

சென்னிமலை:

சென்னிமலை அடுத்த ஈங்கூரில் பிரசித்தி பெற்ற மகா மாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவில் வளாகத்தில் அரசமரமும் வேப்ப மரமும் ஒரே இடத்தில் ஒன்றாக வளர்ந்து உள்ளது. இந்த நிலையில் வேப்ப மரத்தின் அடிப்பகுதியில் இருந்து மூன்று அடி உயரத்தில் பால் வடிந்தது. இதை பார்த்து கோவிலுக்கு சாமி கும்பிட வந்த பக்தர்கள் பரவசமடைந்தனர்.

இதை தொடர்ந்து வேப்ப மரத்திற்கு சேலை அணிவித்து மஞ்சள் நீர் ஊற்றி மாலை அணிவித்து சிறப்பு பூஜை செய்தனர். இதுகுறித்து தகவல் பரவியதை அடுத்து ஏராளமான பக்தர்கள் வந்து வேப்ப மரத்தினை வழிபட்டு செல்கின்றனர்.

Similar News