செய்திகள்

இளையான்குடியில் ரூ.30 லட்சம் கொள்ளை: போலீஸ்காரர் உள்பட 6 பேர் கைது

Published On 2017-01-04 12:46 IST   |   Update On 2017-01-04 12:46:00 IST
இளையான்குடியில் ரூ. 30 லட்சம் கொள்ளை வழக்கில் போலீஸ்காரர் உள்பட 6 பேர் கைது செய்யப்பட்டனர். இது குறித்த செய்தியை விரிவாக பார்க்கலாம்.
சிவகங்கை:

மதுரையைச் சேர்ந்தவர் முஜிபுர் ரகுமான் (28). இவர், தனது நண்பர்களுடன் 15 சதவீத கமி‌ஷன் முறையில் ரூபாய் நோட்டுக்களை மாற்றுவதற்காக புதிய 2 ஆயிரம் நோட்டுகள் ரூ. 30 லட்சத்துடன் ஒரு காரில் சிவகங்கை மாவட்டம் இளையான்குடிக்கு கடந்த 15-ந் தேதி சென்றார்.

அப்போது 2 கார்களில் வந்த 19 பேர் கொண்ட கும்பல் இவர்களை தாக்கி ரூ. 30 லட்சத்தை பறித்துச்சென்றது.

இது தொடர்பாக இளையான்குடி போலீசார் சிவகங்கை, திருப்பூர் மாவட்டங்களைச் சேர்ந்த 10 பேரை கைது செய்தனர்.

இந்த கொள்ளையில் தொடர்புடைய நெல்லை தாழையூத்தைச் சேர்ந்த பாலா என்ற பாலமுருகன் (20), முருகன் என்ற வேல்முருகன் (24), சுந்தர் (24), செல்வம் (23), சரவணன் என்ற சிவசரவணன் (33), ஆறுமுககுமார் (25) ஆகிய 6 பேர் தாழையூத்தில் உள்ள ஒரு வீட்டில் பதுங்கி இருப்பதாக போலீசுக்கு தகவல் கிடைத்தது.

இளையான்குடி போலீசார் அங்கு சென்று 6 பேரையும் கைது செய்தனர். இதில் ஆறுமுககுமார், தூத்துக்குடி மாவட்டம் குரும்பூர் காவல் நிலைய போலீஸ்காரர் என்பது விசாரணையில் தெரியவந்தது.

இந்த கொள்ளை சம்பவத்தில் இதுவரை 16 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Similar News